மதுரைக்குள் நுழைய ஸ்டாலினுக்கு தடை.. அதிமுக தீர்மானத்தை சட்ட ரீதியாக சந்திக்க திமுக முடிவு
மதுரை : மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்கக்கோரி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை சட்டரீதியாக சந்திக்கப்போவதாக தி.மு.க.வினர் அறிவித்துள்ளனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தை அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் தொடங்கினார். இவர் வருகிற 26-ம் தேதி மதுரைக்கு வருகிறார்.

இந்நிலையில், மதுரை மாநகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. மேயர் ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மேயர் கூறியதாவது...
மதுரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர். இங்கு பல சாலைகள் ஒரு வழிப்பாதையாக உள்ளன. மு.க.ஸ்டாலின் நூறுக்கும் மேற்பட்ட வாகனங்களுடன் ஒரு வழிப்பாதையில் பயணம் செய்ய உள்ளார். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்படுவர்.
மேலும் துணை முதல்வராக இருந்தபோது மதுரை ரயில் நிலையத்தில் ஒருவர் தன்னை தாக்க முயற்சித்ததாகப் புகார் செய்து இசட் பிளஸ் பாதுகாப்பை பெற்றார். இதனால் மதுரையில் ஸ்டாலின் பயண நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, காவல் ஆணையர், மதுரை ஆட்சியருக்கு அனுப்புகிறோம். இவ்வாறு ராஜன்செல்லப்பா கூறினார்.
ஸ்முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்தபோது விடுதலைக்காக மதுரையில் அ.தி.மு.க. வினர் நடத்திய ஊர்வலத்தால் பல மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. ஸ்டாலின் நடந்துதான் செல்கிறார். மதுரை நகரில் வரும் 26-ம் தேதி ஸ்டாலின் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்.
சனிக்கிழமை நீதிமன்றமோ, பள்ளிகளோ செயல்படாது. போலீஸில் அனுமதி கோரி மனு அளித்துள்ளோம். தடுக்க நினைத்தால் சட்டப்படி சந்திப்போம். அ.தி.மு.க. வினரிடையே உள்ள கோஷ்டி பூசலால் தங்கள் நிலையை கட்சித் தலைமைக்கு கொண்டுசெல்ல இவ்வாறு செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
-
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
திமுக கூட்டணி ஓவர்! முற்போக்கு பிராண்டிங்கை தட்டிப்பறித்த விஜய்! அறிவாலயத்தை அலறவிடும் புது அஸ்திரம் -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி! -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்?












Click it and Unblock the Notifications