என்னை நீக்கிய பிறகு எந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெறவில்லை... கெத்து காட்டும் அழகிரி!
என்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு எந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெறவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை: என்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு எந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெறவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த பிறகு ஸ்டாலின் - அழகிரி இடையேயான மோதல் முற்றியுள்ளது. கட்சிப்பதவிக்காக அழகிரி காத்திருக்கும் நிலையில் அதனை ஸ்டாலின் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
இந்நிலையில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னை அண்ணாசாலையில் இருந்து கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடத்தப்படும் என அறிவித்துள்ளார் அழகிரி. ஸ்டாலின் தரப்புக்கு தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த பேரணியை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

தலைவராகிறார் ஸ்டாலின்
இதனிடையே வரும் 28 ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் கட்சியின் தலைவராக அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்படவுள்ளார். இதனால் திமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அழகிரி ஆலோசனை
இந்நிலையில் மதுரையில் நேற்று முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார் அழகிரி. இன்று இரண்டாவது நாளாக தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஒருமுறைக்கூட வெற்றி பெறவில்லை
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு திமுக எந்த தேர்தலிலும் ஒருமுறைக்கூட வெற்றி பெறவில்லை என்றார்.

தொடர் தோல்வி
அழகிரி சொல்வது போலவே 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இதேபோல் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற எந்த இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெறவில்லை.

அழகிரி விமர்சனம்
மேலும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் திமுக தோல்வியை சந்தித்தது. ஸ்டாலின் கட்சி நிர்வாகத்தில் தலையிடும் வரை திமுக தோல்வியைதான் சந்திக்கும் என அழகிரி விமர்சித்திருந்தார்.

தனது தயவு இல்லாவிட்டால்
இந்நிலையில் தன்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு திமுக எந்த தேர்தலிலும் வெற்றி பெற வில்லை என அழகிரி கூறியிருப்பது, தனது தயவு இல்லாவிட்டால் திமுக தோல்வியைதான் சந்திக்கும் என அழகிரி மறைமுகமாக கூறுவதாக கருதப்படுகிறது.
-
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி!












Click it and Unblock the Notifications