திமுக மா.செ.க்களுக்கு திடீர் அழைப்பு- கருணாநிதி தலைமையில் 8ம் தேதி முக்கிய ஆலோசனை!
சென்னை: தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி தலைமையில், இம்மாதம் 8-ம் தேதி அக்கட்சியின் மாவட்டச் செயலர்கள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இம்மாதம் 8-ம் தேதி காலை 10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து ஆலோசிக்கப்படும் இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆளும் கட்சியினரால் தமிழகம் முழுவதும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
உச்சகட்டமாக திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல், கலவரத்தைத் தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கும் சென்னையில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுகிறது திமுக என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!











Click it and Unblock the Notifications