செப். 8-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர். 8-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர். 8-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அன்று மாலை மரணம் அடைந்தார். கருணாநிதியின் உடல், மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி திமுக செயற்குழு கூடியது. இதில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தற்போது மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஆகஸ்ட் 28ல் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைவர், பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.
இதில் ஸ்டாலின் தலைவராகவும், துரைமுருகன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர். 8-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் இந்த கூட்டம் நடைபெறும்.திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும்.
கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்டாலின் தலைவரான பின் நடக்கும் முதல் கூட்டம் ஆகும் இது. இதனால் இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் க.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications