திமுகவின் பொருளாளர் ஆகிறார் துரைமுருகன்.. போட்டியின்றி தேர்வு!
திமுகவில் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.
சென்னை: திமுகவில் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். பொதுக்குழுவில் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
மிகவும் முக்கியமான கட்டத்தை திமுக எட்டியுள்ளது. திமுக பொதுக்குழு ஆகஸ்ட் 28ல் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும். இந்த கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது.

இதனால் தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் இன்று பெறப்பட்டது. காலையில் ஸ்டாலினும், துரைமுருகனும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். 27ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் வரை வேட்பு மனுக்களை திரும்பப்பெறலாம்.
பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. தலைவர் பதவிக்கு தற்போதைய செயல்தலைவர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். 28ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும்.
திமுகவில் துரைமுருகனுக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய காலஅவகாசம் இன்று மாலை 4 மணியோடு முடிவடைந்துள்ளது. கடைசி நேரம் வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதனால் திமுக பொருளாளர் பதவிக்கு துரைமுருகன், ஒருமனதாக தேர்வாக உள்ளார். யாரும் அவருக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications