நியூட்ரினோ, மருத்துவ படிப்பு ஒதுக்கீடு-திமுக செயற்குழுவில் அசர வைத்த கம்பம் ராமகிருஷ்ணன், பூங்கோதை!
திமுக செயற்குழுவில் கம்பம் ராமகிருஷ்ணன், பூங்கோதை ஆலடி அருணா பேச்சுகள் வரவேற்பை பெற்றனவாம்.
Recommended Video

சென்னை: திமுக செயற்குழுவில் நியூட்ரினோ திட்டத்தால் ஏற்படும் கேடுகள் குறித்தும் முதுநிலை மருத்துவ படிப்பில் பறிபோகும் தமிழக மாணவர்கள் வாய்ப்பு குறித்தும் கம்பம் ராமகிருஷ்ணன், பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் பேசிய பேச்சு பெரும் வரவேற்பை பெற்றது என்கின்றன திமுக வட்டாரங்கள்.
காவிரி பிரச்சனைக்காக திமுகவின் அவசர செயற்குழு சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழுவில் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம், ஏப்ரல் 2-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் என 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கம்பம் ராமகிருஷ்ணன் எழுந்து நியூட்ரினோ திட்டம் என்றால் என்ன? நியூட்ரினோவால் எப்படி ஆபத்து ஏற்படும்? நியூட்ரினோ திட்டத்தால் எதிர்காலத்தில் தேனி மாவட்டம் எதிர்கொள்ளப் போகும் பிரச்சனைகளை விரிவாக வகுப்பு எடுப்பது போல் பட்டியலிட்டாராம். அவரைத் தொடர்ந்து பூங்கோதை ஆலடி அருணா எழுந்து முதுநிலை மருத்துவ படிப்பில் தமிழக மாணவர்களின் வாய்ப்பு பறிபோகும் சூழ்நிலைகளை விவரித்திருக்கிறார்.
அப்போது, நமது பிள்ளைகள் பிடிக்க நாம் கட்டிய மருத்துவ கல்லூரிகளில் வடநாட்டு மாணவர்கள் வந்து படித்துவிட்டு போகிறார்கள். இந்த பிரச்சனையில் நாம் போதிய கவனம் செலுத்த தவறிவிட்டோம்.. இனியாவது இதை கையில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாராம். இதேபோல் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாம்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் திமுகவும் இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அன்னியப்பட நேரும் என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டதாம்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications