அவசரமாக கூடிய திமுக செயற்குழு.. கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்
திமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: திமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் தற்போது சென்னையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. முக்கிய தலைவர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகம் முழுக்க எல்லா திமுக மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள், தலைவர்கள் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும்.
திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி அன்று மாலை மரணம் அடைந்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி வயோதிகம் காரணமாக மரணம் அடைந்தார்.
திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். இரங்கல் தீர்மானத்தின் நகல் எல்லோருக்கும் வழங்கப்பட்டது. கருணாநிதி நிகழ்த்திய சாதனைகள் வரிசையாக அதில் பட்டியலிடப்பட்டுள்ளது.

அதில், மக்களுக்காக கடைசி நாள் வரை பாடுபட்டவர் கருணாநிதி. பொது வாழ்வில் அவர் செய்தது அசாத்திய சாதனை. பொது வாழ்வில் இருக்கும் நபர்கள் பார்த்து படித்து கற்றுக் கொள்ள அவரிடம் நிறைய உள்ளது. அரசியலில் பல்கலைகழகமாக இருந்தவர் கருணாநிதி.
தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். பல மாநிலங்களில் அந்த திட்டங்கள் இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. மக்களிடையே ஏற்றத்தாழ்வு போக்கி, சமத்துவம் கொண்டு வந்தவர் கருணாநிதி.

இடஒதுக்கீடு, ஐடி துறை, மருத்துவம், பாலம், சாலை, என்று பல முன்னேற்ற திட்டங்கள் மூலம் தமிழகத்தை வேறு நிலைக்கு கொண்டு சென்றார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் மாநிலச் சுயாட்சி, 33 % சதவீதம் இட ஒதுக்கீடு என்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்று இரங்கல் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications