சமூகசேவகியாக இருந்து சேலம் எம்.பி வேட்பாளரான உமாராணி செல்வராஜ்
சேலம்: சேலம் தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள உமாராணி செல்வராஜ் வயது 54. எம்.ஏ., சமூகவியல் பட்டதாரி. கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். தொழில் - கைத்தறி மொத்த விற்பனையாளர்.
இவரது கணவர் டாக்டர் செல்வராஜ், இவர்களுக்கு குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள். சுனிதா இராசா, சுகன்யா மதன்.

சமூக சேவகர்
உமாராணி, அரசியல் பணிகளை காட்டிலும் சமூகப்பணியில் நல்ல ஈடுபாடு உடையவர். ஆதரவற்ற அநாதை குழந்தைகளின் மறுவாழ்வுக்காவும், கிராமப் புற பெண்கள் மேம்பாட்டுக்காகவும், சமூகத்தால் ஒதுக்கப்படும் எய்ட்ஸ் நோயாளிகள், திருநங்கைகள், ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் பல தொண்டு நிறுவனங்களோடு இணைந்து இவர் சேவை செய்து வருகிறார்.
மாமன்ற உறுப்பினர்
இவர் 1996 - 2001 சேலம் மாநகராட்சி 15வது கோட்ட முன்னாள் மாமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
வீரபாண்டியார் இருக்கும் வரை கட்சிப்பணிகளில் நேரடியாக ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். வீரபாண்டியார் இறந்த பிறகு வெளிப்படையாக கட்சி பணிகள் ஆற்றி வருகிறார்.
மனைவியின் தோழிக்கு வாய்ப்பு
ஸ்டாலின் மனைவி துர்காவிற்கு நெருங்கிய தோழி.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தார் சேலம் வந்தால் உமாராணி வீட்டில் இருந்து தான் சாப்பாடு செல்லுமாம். மனைவியின் தோழிக்கு எம்.பி வாய்ப்பு கொடுத்துவிட்டார் ஸ்டாலின் என்கின்றனர். இதனால் வீரபாண்டியார் குடும்பத்திற்கு செக் வைத்துவிட்டதோடு மனைவியையும் மகிழ்ச்சிபடுத்திவிட்டார் ஸ்டாலின்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications