நெடுஞ்சாலைகள் பெயரை மாற்றி டாஸ்மாக் கடைகள் திறக்க முயற்சி: நீதிமன்றத்தில் திமுக முறையீடு
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க சாலைகளை உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நீதிமன்றத்தில் முறையீட்டுள்ளது.
சென்னை : மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க நெடுஞ்சாலைகளை, ஊரக மற்றும் நகர சாலைகளாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இந்த மாதம் மூடப்பட்டது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சிக்களுக்கு உட்பட்ட சாலைகளாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறப்பதற்காக சாலைகளின் பெயர்கள் மாற்றப்படுவதாக புகாரில் திமுக குறிப்பிட்டுள்ளது.
திமுக தொடர்ந்த மனுவை, நாளை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ரூ.10375 தான் சம்பளம்: டாஸ்மாக் ஊழியர் அமைச்சர் முஸ்தபாவிடம் பேசிய வீடியோ.. எதார்த்தம் என்ன












Click it and Unblock the Notifications