அதிமுகவை விட 2 மடங்கு முஸ்லீம் வேட்பாளர்கள் திமுகவில்.. ஆனால் ஒரு பெண்ணுக்கும் சீட் தந்திருக்கலாம்
சென்னை: அதிமுகவுடன் ஒப்பிட்டால் திமுக கூட்டணியில் இரண்டு மடங்கு முஸ்லீம் வேட்பாளர்கள் உள்ளனர். அதேசமயம், அதிமுகவில் கொடுத்ததைப் போல திமுகவிலும் சரி, திமுக கூட்டணியிலும் சரி பெண் முஸ்லீம் வேட்பாளர்கள் யாரும் இல்லை.
அதிமுக கூட்டணியில் மொத்தமே 7 முஸ்லீம் வேட்பாளர்கள்தான் இடம் பெற்றுள்ளனர். இதில் 3 பேர் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 4 பேர் அதிமுக வேட்பாளர்கள் ஆவர்.

கூட்டணிக் கட்சிகளில் தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு இடமும், மனித நேய ஜனநாயகக் கட்சிக்கு 2 இடமும் கொடுத்துள்ளது அதிமுக. ஆக மொத்தம் 7 முஸ்லீம் வேட்பாளர்கள் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளனர்.
திமுகவைப் பொறுத்தவரை 2 முஸ்லீம் கட்சிகள் அங்கு இடம் பெற்றுள்ளன. இ்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 இடமும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 இடமும் வழங்கியுள்ளது திமுக.
ஆக, கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டும் 10 முஸ்லீம் வேட்பாளர்கள் வந்து விட்டனர். இவர்கள் வாணியம்பாடி, ஆம்பூர், விழுப்புரம், தொண்டாமுத்தூர், உளுந்தூர்ப்பேட்டை, மணப்பாறை, பூம்புகார், நாகப்பட்டனம், ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய தொகுதிகளில் போடடியிடுகின்றனர்.
மறுபக்கம் திமுக தன் பங்குக்கு 3 முஸ்லீம் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. குன்னூர் முபாரக், திண்டுக்கல் பஷீர் அகமது, பாளையங்கோட்டை டிபிஎம் மைதீன் கான் ஆகியோரே அவர்கள்.
ஆக மொத்தம் 13 முஸ்லீம் வேட்பாளர்கள் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளனர். ஆனால் திமுகவில் ஒரு முஸ்லீம் பெண் வேட்பாளர் கூட இடம் பெறவில்லை. இதுதான் ஒரு உறுத்தலாக உள்ளது. அனைவருமே ஆண் வேட்பாளர்கள்தான். ஒரு பெண் வேட்பாளரை திமுகவோ அல்லது முஸ்லீம் கட்சிகளோ அறிவித்திருந்தால் பேலன்ஸ்ட் ஆக இருந்திருக்கும்.
அதேசமயம், அதிமுகவில் சேப்பாக்கம் நூர்ஜஹான், வாணியம்பாடி நீலோபர் கபீல் என இரு முஸ்லீம் பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications