அதிருப்தியாளர்களை போனில் கூப்பிட்டு சமாதானப்படுத்தும் ஸ்டாலின்! திக்குமுக்காடும் திமுகவினர்!!
திமுகவில் அதிருப்தியில் இருப்பவர்களை போனில் அழைத்து ஸ்டாலின் சமாதானப்படுத்தும் விதமாக பேசுவதால் திமுகவினர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி வருகின்றனர்.
சென்னை: திமுகவின் செயல் தலைவராகிவிட்ட மு.க.ஸ்டாலின் கட்சியில் இருக்கும் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்துவதில் முனைப்புடன் இருக்கிறாராம். ஸ்டாலினே போனில் அழைத்து பேசுவதால் அதிருப்தியில் இருந்த திமுகவினர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடுகின்றனராம்.
திமுகவில் ஸ்டாலின் ஆதிக்கம் ஓங்க தொடங்கியதில் இருந்தே கணிசமான அதிருப்தியாளர்களும் வளரத் தொடங்கினர். ஒருவரை வளர்த்துவிடுவதற்காக உண்மையான கட்சி விசுவாசியை ஓரம் கட்டும் பாணி திமுகவில் நீண்டகாலமாக நடந்து வருகிறது.

அதிரடி புறக்கணிப்பு
இருந்தபோதும் கட்சி, கொள்கை என்பதற்காக பல்லைக் கடித்துக் கொண்டு திமுகவில் தொடருகிறவர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்றும் இருக்கின்றனர். ஸ்டாலின் பொதுவாக ஓரம்கட்டிவிட்டால் அவர்களைத் திரும்பிக் கூட பார்க்காமல் தொடர்ந்து புறக்கணித்துவிடுவாராம்.

திக்குமுக்காடும் திமுகவினர்
ஆனால் திமுகவின் செயல் தலைவரான பிறகு அவருக்கு பலரும் சொன்ன அறிவுரையே, அதிருப்தியில் இருப்பவர்களை சமாதானப்படுத்துங்கள் என்பதுதானாம். இதனால் தம்மால் ஓரம்கட்டப்பட்டவர்கள், ஒதுக்கி வைக்கப்பட்ட பலரையும் ஸ்டாலினே போனில் கூப்பிட்டு பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறாராம் ஸ்டாலின். இந்த அதிரடியால் திமுகவினர் திக்குமுக்காடி வருகின்றனராம்.

எதிர்பார்ப்பு
அத்துடன் பேனர் வைக்க வேண்டாம், காலில் விழ வேண்டாம், சமத்துவ ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என ஸ்டாலின் முதிர்ச்சியுடன் கூறிவருகிறார். இது பல திமுக அதிருப்தியாளர்களை 'நம்பிக்கை வைப்போம்' 'காத்திருப்போம்' 'இன்னும் மாற்றம் வரும்' என எதிர்பார்க்கவும் வைத்துள்ளதாம்.

சளைக்காத கருணாநிதி குடும்ப உறுப்பினர்
அதேநேரத்தில் அதிருப்தியாளர்களை 'துண்டு தலைவரின்' தூண்டுதலில் வளைக்கும் முயற்சியில் கருணாநிதி குடும்பத்து உறுப்பினரும் தீவிரமாக இறங்கி போன் போட்டு பேசி வருகிறாராம். அவருக்கு என்ன பதில் சொல்வது என்ற குழப்பத்திலும் சில திமுக நிர்வாகிகள் இருந்து வருகின்றனராம்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா












Click it and Unblock the Notifications