திமுக பொதுக்குழு இன்று கூடுகிறது.. ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி?
திமுக பொதுக்குழு இன்று காலை சென்னையில் நடைபெறுகிறது. இதில் திமுக செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் கூடுகிறது. இக்கூட்டத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த டிசம்பர் 20-ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால் பொதுக்குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே இன்று காலை 9 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் அறிவித்திருந்தார். அதன்படி.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்பாரா என்பது சந்தேகம்தான். மருத்துவர்களின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார் கருணாநிதி.
இப்பொதுக் குழுவில் சுமார் 3,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் கட்சிக்கு தலைமையேற்று வழிநடத்தும் வகையில் ஸ்டாலினுக்கு செயல் தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவி வழங்கப்படும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேநேரத்தில் கருணாநிதி மகளும் ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி, தமக்கு துணைப் பொதுச்செயலர் பதவி தர வலியுறுத்தி வருகிறார். மேலும் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கருணாநிதியின் மகன் அழகிரி தம்மை மீண்டும் கட்சியில் சேர்த்து தென்மண்டல அமைப்பு செயலர் பதவியை தரவும் நெருக்கடி கொடுத்து வருகிறார். இது தொடர்பாகவும் திமுக பொதுக்குழு விவாதித்து முடிவெடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தமிழகத்தில் நிலவும் வறட்சி, விவசாயிகளின் தொடர் தற்கொலைகள், வர்தா புயல் இழப்பீடு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்தும் அரசியல் நிகழ்வுகள் குறித்த முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications