திமுக பொதுக்குழு நாளை மறுநாள்... செயல் தலைவராவாரா ஸ்டாலின்?
திமுக பொதுக்குழு நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது. இதில் திமுக செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் நாளை மறுநாள் கூடுகிறது. இக்கூட்டத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக அரசியல் களம் அடுத்த சகாப்தங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார்.

செயல் தலைவர் ஸ்டாலின்?
இதேபோல் திமுகவில் அக்கட்சித் தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் திமுகவின் துணைத் தலைவர் அல்லது செயல் தலைவராக அவரது மகன் ஸ்டாலின் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அன்பழகன் தயக்கம்
இதனிடையே கருணாநிதி உடல்நலம் குன்றி அவரால் பேச இயலாத நிலையில் இருப்பதாகவும் ஸ்டாலினை செயல் தலைவராக அறிவிக்க பொதுச்செயலர் அன்பழகன் தயக்கம் காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் ஸ்டாலின் தரப்பு அவரை சமாதானப்படுத்தி வருகிறது.

தீர்மானம் உறுதி
சென்னையில் நாளை மறுநாள் திமுக பொதுக்குழு கூடுகிறது. இப்பொதுக்குழுவில் 3,000 பேர் பங்கேற்கின்றனர். இதில் ஸ்டாலினை செயல் அல்லது துணைத் தலைவர் பதவியில் நியமிக்கும் தீர்மானம் கொண்டுவரப்படுவது உறுதி என்கின்றன திமுக வட்டாரங்கள்.

கனிமொழி, அழகிரிக்கு பதவி?
அதேநேரத்தில் கருணாநிதி மகளும் ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி, தமக்கு துணைப் பொதுச்செயலர் பதவி தர வலியுறுத்தி வருகிறார். மேலும் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கருணாநிதியின் மகன் அழகிரி தம்மை மீண்டும் கட்சியில் சேர்த்து தென்மண்டல அமைப்பு செயலர் பதவியை தரவும் நெருக்கடி கொடுத்து வருகிறார். இது தொடர்பாகவும் திமுக பொதுக்குழு விவாதித்து முடிவெடுக்கும் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications