கருணாநிதி தலைமையில் ஜனவரி 4ல் திமுக பொதுக்குழு கூடுகிறது- முக்கிய முடிவுகள் வெளியாகிறது?
திமுக பொதுக்குழு கூட்டம் ஜனவரி 4ம் தேதி கூடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
சென்னை : திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மூச்சுத் திணறல், நுரையீரல் நோய் தொற்று காரணமாக கருணாநிதி கடந்த 15ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
உடல் நலம் பூரணமாக குணமடைந்த கருணாநிதி கடந்த வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார். கோபாலபுரம் வீட்டில் கருணாநிதி ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் பொதுக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 4ம் தேதி நடைபெறும் காலை 9 மணிக்கு நடைபெறும் என க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 4ஆம் தேதி கூடும் பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று ஜனவரி 4ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கருணாநிதி உடல்நிலை குறைவால் 20ம் தேதி நடைபெற இருந்த கூட்டம் ஜனவரி 4ம் தேதி நடைபெறுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத் தக்கது. முக்கியமாக காலகட்டத்தில் உடல்நலக் குறைவால் வழக்கம் போல கருணாநிதியால் செயல் படாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவருக்கு உதவியாக மு.க.ஸ்டாலின் திமுக செயல் தலைவர் அல்லது துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என திமுக முக்கியத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications