ஜெ.மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி திமுக பொதுக்குழுவில் இரங்கல்

ஜெயலலிதா மறைவுக்கும், கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கும், பத்திரிகையாளர் சோ மறைவுக்கும், திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின், துரைமுருகன், டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். முதல் தீர்மானமாக ஜெயலலிதா மறைவுக்கும், கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கும், பத்திரிகையாளர் சோ மறைவுக்கும், திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்றும் முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணி, சர்குணா மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

DMK General Council meeting passes resolution to condole Jayalalithaa

இதன்பிறகு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாற்று கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆகமொத்தம் 16 தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிப்பது, ஜல்லிக்கட்டை நடத்துவது உள்ளிட்ட பல கோரிக்கைகள் இதில் அடங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+