மாற்று கருத்தாளருக்கும் மரியாதை … துக்ளக் சோ ராமசாமி மறைவுக்கு திமுக பொதுக்குழு இரங்கல்
மாற்று கருத்தாளராக இருந்த துக்ளக் சோ ராமசாமியின் மறைவிற்கு திமுக பொதுக் குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும், சற்குணபாண்டியன் மறைவுக்கும் திமுக பொதுக்குழு இரங்கல் தீர்மானம் போடப்பட்டுள்ள
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாற்றுக் கருத்தாளராகவும் திமுகவை எதிர்த்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்த துக்ளக் சோ ராமசாமி மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
திமுக பொதுக்குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 9 மணியளவில் தொடங்கியது. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி முன்மொழிந்து, க. அன்பழகன் முன்னிலையில் பொதுக் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

இதில், முதலாவதாக மறைந்த உலக மற்றும் தமிழக அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தமிழகத்தின் முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ மறைவிற்கும் இரங்கல் தீர்மானம் போடப்பட்டது.
பின்னர், தமிழக அரசியல் களத்தில் திமுகவிற்கு எதிராக பேசியும், எழுதியும் வந்த துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ. ராமசாமியின் மறைவிற்கும் இரங்கல் வாசிக்கப்பட்டது. மேலும், திமுகவைச் சேர்ந்த கோ.சி. மணி மற்றும் சற்குணப்பாண்டியன் ஆகியோரின் மறைவிற்கும் திமுக பொதுக் குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 3,000 பொதுக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திமுக தலைவர் கருணாநிதி பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications