மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்- கருணாநிதியிடம் வாழ்த்து -மாணவர்களுக்கு மடிக்கணினி
சென்னை: திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் தனது 62வது பிறந்த நாளையொட்டி இன்று திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து பெற்றார்.
முன்னதாக அவர் குடும்பத்தினருடன் கேக் வெட்டி மகிழ்ந்தார். அப்போது மனைவி துர்கா ஸ்டாலின், தாயார் தயாளு அம்மாள், சகோதரி செல்வி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதைத் தொடர்ந்து அவர் திமுக தொண்டர்களின் வாழ்த்துகளைப் பெற்றார்.
ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சனிக்கிழமை காலை 8 மணி முதல் தொண்டர்களிடம் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

முன்னதாக அவர் கருணாநிதி, தாயார் தயாளு அம்மாளை கோபாலபுரம் இல்லத்தில் தனது குடும்பத்துடன் சந்தித்து மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து பெற்றார்.
தி.மு.க. இலக்கிய அணி தலைவர் வேழவேந்தன், செயலாளர்கள் கவிதைபித்தன், தஞ்சை கூத்தரசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க. இலக்கிய அணி சார்பில் பிராட்வேயில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற அரங்கில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சிறந்த இளைஞர்களுக்கு விருது வழங்குதல், கருத்தரங்கம் நடக்க உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.பி.சற்குணபாண்டியன், வி.பி.துரைசாமி, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தி.மு.க. தலைமை இளைஞர் அணி துணைச்செயலாளர் செந்தில்குமாருக்கு "சிறந்த இளைஞர்" எனும் விருது வழங்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து நடக்கும் கருத்தரங்கிற்கு முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மகளிரணி புரவலருமான இந்திராகுமாரி தொடக்க உரையாற்றுகிறார். தஞ்சை கூத்தரசன் தலைமை தாங்குகிறார். "தலைவர் கலைஞர் வழியில் தளபதி" என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ,அவரது பிறந்தநாளையொட்டி முகநூல் (பேஸ்புக்) மூலம் சிறப்பான கருத்துக்களை எடுத்துரைத்த 7 மாணவ-மாணவிகள் உள்பட 22 பேருக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினார்.
தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications