அதிமுக தொடர்ந்து முன்னிலை... சோக மயத்தில் திமுகவின் அண்ணா அறிவாலயம்
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னணியில் உள்ளதால் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒரு சில தொண்டர்கள் சோகமயத்துடன் காட்சியளிக்கின்றனர். தமிழகம் முழுவதும் 134 தொகுதிகளில் அதிமுக முன்னணியில் இருந்தாலும் சென்னை மாவட்டம் திமுகவின் கோட்டையாக மாறியுள்ளதால் பெரும்பாலான திமுக தொண்டர்கள் உற்சாகத்துடனே காணப்படுகின்றனர்.
சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமையன்று காலை 8 மணிக்குத் தொடங்குவதற்கு முன்பிருந்தே திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் குவியத் தொடங்கினர்.

காலை 8.30 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கியபோது திமுக முன்னணி பெற்ற தொகுதிகள் நிலவரம் அறிவிக்கப்பட்டபோது கூடியிருந்த திமுக தொண்டர்கள் சந்தோஷ மனநிலையில் "கலைஞர் வாழ்க' என்று முழக்கமிட்டனர்.
தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிந்து முதல் சுற்று நிலவரம் அறிவிக்கப்பட்டபோது,அதிமுக அதிக இடங்களில் முன்னணியில் இருப்பதாகத் தெரிந்ததும் திமுக தொண்டர்கள் பலரின் முகம் மாறிப் போனது. அண்ணா அறிவாலயமே சோகமயமாக காணப்பட்டது.
மூன்றாம் சுற்று, நான்காம் சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது திமுக வெற்றிபெறப்போவதில்லை எனத் தெளிவாகத் தெரிந்ததும் தொண்டர்கள் ஒவ்வொருவராகக் கலையத்தொடங்கினர்.
தமிழகத்தில் 134 தொகுதிகளில் அதிமுக முன்னணியில் இருப்பதாக கூறப்பட்டது. திமுக 93 தொகுதிகளில் முன்னணியில் இருப்பதாக செய்திகள் வெளியானது. சென்னையில் 12 தொகுதிகளில் திமுக முன்னணியில் இருந்தது. இது திமுகவினரை உற்சாகப்படுத்தியது. பல தொண்டர்கள் திமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
மீதமிருந்த 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் "இப்படி ஆயிடுச்சே. இப்படி ஆயிடுச்சே' என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
பின்னர் அவர்களில் ஒரு சிலர் என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications