அவங்க கேட்டா நாம தருவோம்... பாஜகவுக்கு ஆதரவு தர திமுக ரெடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த் சொன்னதைக் கேட்டு உடனடியாக பாஜகவை ஆதரிக்க திமுக தயாராக இல்லை. அதேசமயம், பாஜக தரப்பிலிருந்து ஆதரவு கோரி வந்தால் அதைப் பரிசீலிக்க திமுக தயாராக உள்ளதாம்.

இந்த விஷயத்தில் தனது கெளரவத்தையும் விட்டுக் கொடுக்காத வகையில் நடந்து கொள்ள விரும்புகிறதாம் திமுக.

உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் இணைந்து போராட வேண்டும், எதிர்க்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

கட்சிகளின் புறக்கணிப்பு

கட்சிகளின் புறக்கணிப்பு

தற்போதைய இடைத் தேர்தலை அதிமுக, பாஜக தவிர மற்ற கட்சிகள் புறக்கணித்து விட்டன. அதேசமயம், பாஜக கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. திமுக அமைதி காத்து வருகிறது.

சிதறாமல், சிந்தாமல்

சிதறாமல், சிந்தாமல்

திமுக வாக்குகளையும் சேர்த்தால், அதிமுகவுக்கு பெரும் நெருக்கடி தரலாம் என்பது தேமுதிகவின் எண்ணம். இதை வலியுறுத்தித்தான் மொத்தமாக, பாரபட்சம் பார்க்காமல் அதிமுகவை எதிர்க்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். இதன் அர்த்தம் அதிமுகவுக்கு எதிராக பாஜக வேட்பாளர்களை பொது வேட்பாளராக மாற்றி ஆதரவு கொடுப்பது என்பதாகும்.

திமுக மெளனம்

திமுக மெளனம்

ஆனால் விஜயகாந்த்தின் அழைப்புக்கு இதுவரை திமுக தரப்பில் மெளனமே பதிலாக உள்ளது. காரணம், இதற்கு முன்பு பல விஷயங்களில் திமுக தரப்பிலிருந்து பலமுறை விஜயகாந்த்தை கெஞ்சியும் கூட அவர் கடைசி வரை முரண்டுபிடிக்கவே செய்தார் என்பது வரலாறு. எனவே இப்போது விஜயகாந்த் சொல்வதை எப்படிக் கேட்பது என்ற யோசனையில் திமுக உள்ளதாம்.

ரகசியப் பேச்சுக்கள்

ரகசியப் பேச்சுக்கள்

இதை உணர்ந்துள்ள தேமுதிக தரப்பினரும், ரகசியமாக சில திமுக புள்ளிகளைச் சந்தித்து உங்கள் தலைவரை சமாதானப்படுத்தி முன்வரச் செய்யுங்கள் என்று வலியுறுத்தி வருகின்றனராம்.

இறங்கி வர திமுக தயார்

இறங்கி வர திமுக தயார்

இதனால் திமுகவும் இறங்கி வரத் தயாராக உள்ளதாம். அதேசமயம், பாஜக தரப்பிலிருந்து வெளிப்படையாக திமுகவின் ஆதரவைக் கோரினால் மட்டுமே ஆதரவு தர திமுக முன்வரும் என்றும் கூறப்படுகிறதாம்.

2ஜி விவகாரம்....!

2ஜி விவகாரம்....!

பாஜகவை இப்போது ஆதரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் 2ஜி விவகாரம் முதல் பல்வேறு பிரச்சினைகளில் சாதக நிலையை எதிர்பார்க்கலாம் என்பதே திமுகவின் நிலைப்பாடாகவும் கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+