"ஹேப்பி தேர்தல் இயர்".. கருணாநிதி, ஸ்டாலின் காலெண்டரை வீடு வீடாக தரும் திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தற்போதே தேர்தல் வேலைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

தேர்தல் கூட்டணிக்கான அஸ்திவாரங்கள் ஒருபுறம் போடப்பட்டு வருகிறது. மறுபுறம் மக்கள் மனதில் தங்களை நிலை நிறுத்தும் பணிகளையும் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் அடங்கிய காலெண்டரை திமுகவினர் வீடு வீடாக இலவசமாக தந்து வருகின்றனர். இதுவும் சட்டசபைத் தேர்தலை கவனத்தில் கொண்டே செய்யப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

DMK issues calendar

வாட்ஸ் அப் மூலம்...

ஏற்கனவே வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட போது திமுகவினர் செய்த உதவிகள், பொதுமக்களைக் காப்பாற்ற அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வாட்ஸ் அப் மூலம் பரப்பப் பட்டு வருகிறது.

நமக்கு நாமே...

இது தவிர ஸ்டாலினின் நமக்கு நாமே சுற்றுப் பயணமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

காலெண்டர்...

இந்நிலையில், தற்போது புத்தாண்டையும் தங்களது பிரச்சாரத்திற்கு பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் திமுகவினர். மக்களிடம் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கருணாநிதி- ஸ்டாலின் படம் போட்ட காலண்டர்களை வீடு வீடாக வினியோகிக்கும் பணி நடந்து வருகிறது.

அனைவருக்கும்...

இதுவரை கட்சிகாரர்களுக்கு மட்டுமே காலண்டர்களை வழங்கி வந்த தி.மு.க.வினர், இப்போது பாராபட்சமின்றி பொதுமக்களுக்கும் வழங்கி வருகின்றனர். வாக்குச்சாவடி வாரியாக நியமிக்கப்பட்ட முகவர்கள் மூலம் காலண்டர் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

உற்சாகம்...

பொதுமக்களில் பெரும்பாலானோர் வேண்டாம் என மறுக்காமல் காலெண்டர்களைப் பெற்றுக் கொள்வது திமுக தொண்டர்களை மேலும் உற்சாகமடைய வைத்துள்ளது.

மற்ற கட்சியினரும்...

இதேபோல் மற்ற கட்சியினரும் அவரவர் தலைவர்களின் படத்தை அச்சிட்டு காலண்டர் வழங்கும் பணியை துரிதப்படுத்தி உள்ளனர். நடுத்தர வர்க்கம், குடிசை பகுதிகளிலேயே அதிகம் காலண்டர் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+