பாஜகவுடன் கூட்டணியா? 'சுற்றி வளைக்கும்' கருணாநிதி?
சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியே இல்லை என்று திட்டவட்டமாக திமுக அறிவித்துவிட்டது. மேலும் தனித்துப் போட்டியிடப் போவதாக கூறிக் கொண்டு "பாஜகவிடம் இருந்து அழைப்பு வந்தால் பார்க்கலாம்" என்று திமுக தலைவர் கருணாநிதி கூறிவருவது அக்கட்சியினரிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
1999 ஆம் ஆண்டு மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திமுக இடம்பெற்றது. அத்துடன் வாஜ்பாய் அமைச்சரவையிலும் தி.மு.க., அங்கம் வகித்தது. கடைசி நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றது.
2004 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்தது. தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற்றதால், அந்த அமைச்சரவையில் தி.மு.க. மிகுந்த செல்வாக்குடன் இருந்தது.

ஸ்பெக்ட்ரத்தால்..
2009 நாடாளுமன்ற நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் உடனான கூட்டணியிலேயே நீடித்தது தி.மு.க. அந்த தேர்தலில் முள்ளிவாய்க்கால் போரில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு, தமிழகத்தில் தி.மு.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் மிகுந்த நெருக்கடியை கொடுத்தது. ஆனாலும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸை விட்டு விலக தயாராக இல்லாமல் இருந்தது திமுக.

தலைகீழாகும் நிலைமை..
ஆனால் தற்போது மத்திய அரசே பல ஊழல் வழக்குகளில் சிக்கிக் கொண்டிருக்கிறது. நிலக்கரி சுரங்க ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங்கே மாட்டிக் கொண்டிருக்கிறார். இதனாலேயே காங்கிரஸை எதிர்க்க கொஞ்சம் தெம்பு பெற்றது திமுக.

5 மாநில தேர்தல் முடிவு
இந்த தெம்புடன் உறவையே அறுத்து எறிய உறுதுணையாக இருந்தது 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு நேர்ந்த படு தோல்வி.

தனித்துப் போட்டி
இதனால்தான் திமுக பொதுக்குழு முடிந்த கையோடு, காங்கிரஸுடன் கூட்டணியே கிடையாது என்று அறிவித்தார் கருணாநிதி. ஆனால் பாஜக தொடர்பாக திமுக தெளிவற்ற நிலையையே கொண்டிருப்பதாக தெரிகிறது.

திமுகவை உள்ளேவிடக் கூடாது
அதே நேரத்தில் திமுகவை பாஜக அணியில் இடம்பெற வைத்துக் கூடாது என்பதில் மதிமுக, பாமக மும்முரம் காட்டி வருகின்றன.

விட்டுவிடாத திமுக
ஆனாலும் பாஜகவுடன் கூட்டணிக்கான கதவை நாங்கள் மூடிவிடவில்லை என்பதை வெளிக்காட்டும் வகையிலேயே "தேர்தலில் தனித்துப்போட்டி; ஆனால் பாரதிய ஜனதா அழைத்தால் அதுகுறித்து முடிவு செய்வோம்" என பொத்தாம் பொதுவாக இன்று கருணாநிதி கூறியுள்ளதாக தெரிகிறது.

திமுக வியூகம்..
திமுகவின் வியூகம் எந்தெந்த கட்சிகளுக்கு செக் வைக்கப் போகிறது? எந்தெந்த கட்சிகளுக்கு வலை வீசப் போகிறது என்பது விரைவில் தெரியத்தானே போகிறது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம்












Click it and Unblock the Notifications