திமுக செய்திகளை சுடச்சுட படிக்க புதிய வெப்சைட்
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் கட்சி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள புதிய இணையதளம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.
திமுக 10வது மாநில மாநாடு கடந்த 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திருச்சியில் பிரமாண்டமாக நடைபெற்றது. மாநாடு நடந்த இரண்டு நாட்களும் அங்கு தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது.
மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

புதிய இணையதளம்
மாநாட்டின் இரண்டாவது மற்றும் இறுதி நாளான நேற்று திமுக பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள http://dmkforpeople.com/ என்ற புதிய இணையதளம் துவக்கி வைக்கப்பட்டது.

என்ன உள்ளது?
புதிய இணையதளத்தில் திமுக மாநில மாநாட்டு செய்திகள், அதன் வீடியோ உள்ளது. இது தவிர கருணாநிதியின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் உள்ளன.

ஏற்கனவே ஒன்று
திமுகவுக்காக ஏற்கனவே ஒரு இணையதளம் உள்ளது. மேலும் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருக்கும் தனித்தனியாக இணையதளங்கள் உள்ளன. இந்நிலையில் தான் புதிதாக ஒரு இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
இந்த இணைய தளத்தின் மூலம், 2014 நாடாளுமன்றத்
தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தி.மு.கழகம் மேற்கொள்ளும்' என இந்த இணைய தளத்தை உருவாக்கி செயல்படுத்தும் கருணாநிதியின் இணையதள உதவியாளர்கள் என்.நவீன் மற்றும் எஸ். சுரேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

ஃபேஸ்புக்
திமுகவுக்கு என்று ஃபேஸ்புக்கில் ஒரு பக்கம் உள்ளது. இது தவிர கருணாநிதியும், ஸ்டாலினும் ஃபேஸ்புக்கில் அவ்வபோது கருத்துகளை தெரிவித்து வருவதோடு, கட்சி குறித்த தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications