wishthalaivar.com போங்க... கருணாநிதியை வாழ்த்துங்க!
வைரவிழா நாயகன் கருணாநிதியை நேரில் சந்தித்து வார்த்த முடியாதவர்கள் இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவிக்க தனியாக ஒரு இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை : திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்த முடியவில்லை என்ற வருத்ததை போக்க விஷ் தலைவர் என்ற இணையபக்கத்தில் வாழ்த்துகளை தெரிவிக்கும் வசதியை திமுக அறிமுகம் செய்துள்ளது.
ஒரு சொல்லில் பல அர்த்தம் காணும் கம்பீரப் பேச்சுக்கு சொந்தக்காரரான திமுக தலைவர் கருணாநிதி தனது 94வது பிறந்தநாளை ஜூன் 3ம் தேதி கொண்டாடுகிறார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவரை தொண்டர்கள் நேரில் சந்திக்க வர வேண்டாம் என்று திமுக கேட்டுக் கொண்டுள்ளது.

இணையதளம்
இதனால் ஏமாற்றத்தில் உள்ள தொண்டர்கள் தங்கள் தலைவருக்கான வாழ்த்தை இணையதளம் வாயிலாக தெரிவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது திமுக. wishthalaivar.com என்ற இணையபக்கத்தை உருவாக்கி அதன் மூலம் வாழ்த்து தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஸ்டாலின் முதல் வாழ்த்துப் பதிவு
இந்த இணையதளத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். ஸ்டாலின் தனது முதல் வாழ்த்துச் செய்தியினை பதிவு செய்தார்.
வீடியோ பாடல்
wishthalaivar.com இணையப் பக்கத்தில் வாழ்த்து தெரிவிக்க விரும்பும் நபர் தம்மைப் பற்றிய விபரங்களுடன் வாழ்த்துக்குறிப்பையும் அனுப்பலாம். மஞ்சள் துண்டுடன் சக்கர நாற்காலியில் வரும் கருணாநிதியை மட்டுமே பார்த்து பழகிய இளம் தலைமுறையினருக்கு கருணாநிதியின் தொடக்க கால அரசியல் தொகுப்பு "வா, வா தலைவா வணக்கம் வணக்கம்" என்று ஒளி, ஒலிப் பாடலாக இடம்பெற்றுள்ளது.

பொக்கிஷ காட்சிகள்
மேலும் சட்டப்பேரவையின் வைரவிழா நாயகர் தலைவர் கருணாநிதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற காட்சிப் பதிவுகளும் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்டோர் கடந்த 2016ம் ஆண்டில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் அனைவரும் பார்த்து ரசிப்பதற்காக இணையபக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications