"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா
ஊட்டி: தமிழ்நாட்டில் இப்போது விஜய் தலைமையிலான தவெக ஆட்சியைப் பிடித்துள்ளது. தவெக தரப்பைத் திமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ ராசா, தவெகவை மிகக் கடுமையாகச் சாடினார். எந்தவொரு தியாகமும் செய்யாத அர்ப்பணிப்பு இல்லாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டதாக அவர் விமர்சித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மாவட்ட திமுக மாவட்ட கூட்டம் நடைபெற்றது. குன்னூர் எம்எல்ஏ கே.எம்.ராஜு தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நீலகிரி எம்பியும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா கலந்து கொண்டார். நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.

ஆ ராசா
அப்போது அங்குக் கூடியிருந்த கட்சித் தொண்டர்களிடையே பேசிய ஆ.ராசா, திமுக கண்டிடாத தோல்வியும் அல்ல, வெற்றியும் அல்ல எனச் சொன்ன அவர், தமிழ்நாட்டில் எந்தவொரு தியாகமும் அர்ப்பணிப்பும் இல்லாத ஒரு கூட்டம் வந்துவிட்டதாக தவெகவை சாடினார். அதேநேரம் மிசா சிறைவாசம் முதல் மேயர், அமைச்சர் எனப் பல கட்டங்களைக் கடந்து பக்குவப்பட்ட ஒரு தலைவராக மு.க.ஸ்டாலின் விளங்குவதைத் தொண்டர்கள் தெரிவித்தார்..
அர்ப்பணிப்பு இல்லாத கூட்டம்
அந்தக் கூட்டத்தில் ஆ ராசா மேலும் பேசுகையில், "யாரோ ஒருத்தர் சொன்ன மாதிரி எதிர்பாராதவிதமாக அரசியலுக்கு, பொது வாழ்க்கைக்கு வந்து எந்தத் தியாகமும் செய்யாமல், எந்த அர்ப்பணிப்பும் செய்யாமல் ஒரு கூட்டம் வந்திருக்கிறது. ஆனா, தியாகத்திலேயே வளர்ந்து, இளமைப் பருவத்திலிருந்தே கட்சியிலே படிப்படியாக முன்னேறி, ஆட்சிப் பொறுப்பிலும் படிப்படியாக முன்னேறி.. இன்னும் நான் பெருமையோடு சொல்கிறேன், இந்தியாவில் இளைஞரணிச் செயலாளராகத் தொடங்கி, அதற்குப் பிறகு துணைப் பொதுச் செயலாளர், பிறகு பொருளாளர், பிறகு செயல் தலைவர்... ஆட்சிப் பொறுப்பிலே சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதலமைச்சர், பிறகு முதலமைச்சர் என படிப்படியாக உயர்ந்தவர்.
ஸ்டாலின்
கட்சியிலும் ஆட்சியிலும் பல தியாகங்களைச் செய்து, சிறைக்குப் போய், விசாரணை எதிர்கொண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்று பணியாற்றிய ஒரு தலைவன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இப்போது அரசியலில் இந்தளவுக்கு படிப்படியாக வளர்ந்த தலைவர் யார் இருக்கிறார்கள்? இந்தப் பரிணாம வளர்ச்சி கொண்ட ஒரு தலைவர் யாருமே இல்லை. மோடி, அமித் ஷா என யாரும் இல்லை" என்றார்.
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், அரசியலில் எந்தவொரு தியாகமோ அல்லது ஆரம்பக்கட்ட உழைப்போ இல்லாமல் நேரடியாகச் சிலர் பொது வாழ்க்கைக்கு வருவதாக ஆ.ராசா சாடியுள்ளார். அதற்கு மாறாக, மு.க.ஸ்டாலின் இளைஞர் அணிச் செயலாளர் முதல் முதலமைச்சர் வரை கடந்து வந்த நீண்ட அரசியல் பாதையையும், மிசா போன்ற சிறைவாசத் தியாகங்களையும் செய்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு!












Click it and Unblock the Notifications