காவேரி மருத்துவமனையில் குவிந்த கருணாநிதி குடும்பத்தினர் புறப்பட்டனர்!
சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்த கருணாநிதி குடும்பத்தினர் வீட்டிற்கு புறப்பட்டனர்.
Recommended Video

சென்னை: காவேரி மருத்துவமனைக்கு வந்த கருணாநிதி குடும்பத்தினர் வீட்டிற்கு புறப்பட்டனர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று 10 வது நாளாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவரது உடல்நிலையில் ஆரம்பத்தில் நலிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையை தொடர்ந்து உடல் நிலை சீரானது.

மருத்துவமனை முன்பு
கருணாநிதியின் உடல் நிலை மோசமடைந்ததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர்.

காலையில் கனிமொழி
அரசியல் கட்சியினரும் தொடர்ந்து திமுக தலைவரை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். காலை 7 மணிக்கே திமுக எம்பி கனிமொழி மருத்துவமனைக்கு வந்தார்.

தயாளு அம்மாள் வருகை
அவரை தொடர்ந்து முக அழகிரி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர். இந்நிலையில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார்.

குடும்பத்தினர் வருகை
கருணாநிதி பயன்படுத்தும் காரில் தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்தார். தயாளு அம்மாளுடன் மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர்

குடும்பத்தினர் புறப்பட்டனர்
கருணாநிதியின் குடும்பத்தினர் தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருந்தனர். தொண்டர்களும் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். இந்நிலையில் கருணாநிதியின் குடும்பத்தினர் மருத்துவனையில் இருந்து புறப்பட்டனர்.












Click it and Unblock the Notifications