ஜூன் 3ஆம் தேதி நிர்வாகிகளை சந்திக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி.. தொண்டர்கள் உற்சாகம்!
தனது பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி திமுக நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தனது பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி திமுக நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் மருத்துவமனையில் டிவி பார்ப்பது போன்ற போட்டோ வெளியானது.
தொண்டர்களுக்கு நிம்மதியை தந்தது. ஆனாலும் திமுக தலைவர் கருணாநிதியை நேரடியாக சந்திக்க முடியவில்லையே என தொண்டர்கள் வருத்தப்பட்டு வந்தனர். அவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் ஸ்டாலினின் பிறந்த நாளின் போது அவருக்கு கருணாநிதி புத்தகத்தை பரிசாக வழங்கும் போட்டோ வெளியானது.

உடல்நிலையில் முன்னேற்றம்
கருணாநிதியின் உடல் நிலை கடந்த மாதத்தை விட இப்போது ஓரளவு தேறி உள்ளது. அவரை சந்திக்க வருபவர்களை பார்த்து சிரிக்கிறார். ஓரிரு வார்த்தை சொல்ல முயற்சிக்கிறார்.

பேச்சுப் பயிற்சி
தொண்டையில் டியூப் பொருத்தப்பட்டிருப்பதால் முழுமையாக பேச முடியவில்லை. இன்னும் ஓரிரு நாளில் ‘டியூப்' அகற்றப்பட்டு விடும்.
அதன் பிறகு அவர் முழுமையாக பேசுவதற்கு பேச்சுபயிற்சி அளிக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது.

ஜூன் 3ஆம் தேதி பேசுவார்
ஜூன் -3 ந்தேதி பிறந்த நாளன்று அவர் முழுமையாக பேசும் அளவுக்கு பேச்சு பயிற்சி அளிக்கப்படும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கருணாநிதி முழுமையாக பேசினால், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை ஜூன் 3-ந் தேதி சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நிர்வாகிகள் தொண்டர்கள் மகிழ்ச்சி
நீண்ட நாட்களுக்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதி கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கட்சித் தலைவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப்போவதால் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications