இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தன்... கருணாநிதி வாழ்த்துகள்
சென்னை: இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
இலங்கை நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு தி.மு. கழகத்தின் சார்பில் இதயமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி நடைபெற்ற தேர்தலில், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழர் தேசிய கூட்டமைப்பு; 16 உறுப்பினர்களைக் பெற்று, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இடம் வகித்தது. ஐக்கிய மக்கள் சுதந்திரா கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் முக்கியமான பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்த தேசிய அரசு அங்கே அமைக்க இரண்டு கட்சிகளுமே ஒப்புக் கொண்டன.
அதன் காரணமாக அங்கே இரண்டாவது பெரிய கட்சி, எதிர்க் கட்சியாக அங்கே அமரவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மூன்றாவது கட்சியான தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கப் பெற்று, இரா. சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
38 ஆண்டுகளுக்கு முன்பு 1977ஆம் ஆண்டு எனது அருமை நண்பர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக இருந்த நாவலர் அமிர்தலிங்கம் அவர்களுக்குப் பிறகு, தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக ஆகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது.
இலங்கைத் தமிழர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் விடிவு காலம் ஏற்படாதா என்று நீண்ட நாட்களாக எதிர்நோக்கி யிருக்கும் வேளையில், எதிர்க் கட்சித் தலைவராக சம்பந்தன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நமக்கெல்லாம் ஓர் நம்பிக்கையைத் தருகிறது.
இலங்கை நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு திமு கழகத்தின் சார்பில் இதயமார்ந்த வாழ்த்துகள்
Read: http://t.co/ma8edszoGg
— KalaignarKarunanidhi (@kalaignar89) September 5, 2015 சம்பந்தன் அவர்களும் இலங்கைத் தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும், அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்று கூறியிருப்பதும் மகிழ்ச்சியைத் தருகிறது.
சம்பந்தன் அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications