கருணாநிதி நலமாக உள்ளார்: மு.க.அழகிரி பேட்டி
திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் என முக அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் என முக அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீர் பாதை தொற்று மற்றும் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கருணாநிதியை காண அவரது மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து மருத்துவமனையில் குவிந்தனர்.

திருநாவுக்கரசர் தகவல்
இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காவேரி மருத்துவமனைக்கு விரைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டு தற்போது கண்காணிப்பில் உள்ளார் என்றார்.

பிரார்த்தனை செய்வோம்
அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தேன் என்ற கருணாநிதியின் உடல்நிலை நலம் பெற கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம் என்றார்.

புறப்பட்ட அழகிரி
இதனால் திமுக தொண்டர்கள் மீண்டும் கலக்கமடைந்தனர். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான அழகிரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் வீட்டிற்கு புறப்பட்டார்.

தலைவர் நலமாக உள்ளார்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் என்றார். இதனால் தொண்டர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications