பாஜக கூட்டணிக்கு திமுக வெளியில் இருந்து ஆதரவா?
சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை திமுக வெளியில் இருந்து ஆதரிக்கலாம் என செய்திகள் வெளியாகி இருக்கிறன.
பாஜக தேசிய தலைவர்கள் ஆதரவு கோரி அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின .இதனை உறுதிப்படுத்தும் வகையில் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. மலைச்சாமியும் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் எனக் கூறியிருந்தார்.

ஆனால் அதிமுக பொதுச்செயலாளரான தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, அப்படி கருத்து தெரிவித்த காரணத்துக்காகவே மலைச்சாமியை கட்சியைவிட்டே நீக்கிவிட்டார். இதனால் மோடி தரப்பு அதிருப்தி அடைந்தது.
பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெளியில் இருந்து திமுக ஆதரிக்கப் போவதாக ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியாகத் தொடங்கியுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், எங்களுக்கு அப்படி ஒரு யோசனையோ திட்டமோ எதுவும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை மதச்சார்பற்ற கட்சிக்குத்தான் ஆதரவு என்பது நிலை. அப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தேவை என எங்களிடம் கோரிக்கை வைத்தால் அதுபற்றி எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி விவாதிக்கும் என்றார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?











Click it and Unblock the Notifications