திமுக தேர்தல் அறிக்கை பணிகள் 90 சதவீதம் முடிவடைந்தது: ஸ்டாலின் தகவல்
விழுப்புரம்: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்ததுவிட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டான் தமிழகம் முழுவதும் நமக்குநாமே விடியல் மீட்பு பயணம் பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்து கேட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக பயணம் மேற்கொண்டுள்ள தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிடாகத்தில் கரும்பு விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது கரும்பின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறிய விவசாயிகள் கரும்பு சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களை அரசே வழங்குவதோடு, பயிர்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
தொடர்ந்து உளுந்தூர்பேட்டை அருகே சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலையில் சாலையோர விடுதியில் உள்ள அரங்கில் வியாபாரிகளை சந்தித்து ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில், நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை அ.தி.மு.க.,வினர் கொச்சைபடுத்தி விமர்சித்து வருகின்றனர். ஆனால், மக்களிடையே இது பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தி.மு.க.,வின் சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தற்போது இந்த சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை சென்றப்பின் அந்த குழுவினருடன் கலந்து ஆலோசனை நடத்தி நமக்கு நாமே பயணத்தின் போது, பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கூறிய கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை ஆய்வு செய்து திட்டங்களை தயார் செய்து தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று கூறினார்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications