திமுகவுக்கு 5 இடங்கள் தான் கிடைக்கும்: அழகிரி
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மூன்றில் இருந்து ஐந்து தொகுதிகள்தான் கிடைக்கும் என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்தார்.

இதுதொடர்பாக, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
திமுகவுக்கு எதிராக நான் வெளிப்படையாக பேசுவது கட்சிக்கு பலவீனப்படுத்தாதா என்று கேட்கிறீர்கள். ஆனால் என்னை அவர்கள் பலவீனப்படுத்துகிறார்கள். நான் 'பவர்புல்லாக' வளர்ந்து வருவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். என்னிடம் பேசுவதில்லை.
நாடாளுமன்ற தேர்தலில், பலமுனை போட்டியால் திமுகவுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். அதிமுகவுக்கு ஆதாயமாக முடியும். திமுக மூன்று அல்லது அதிகபட்சம் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும். திமுக பிரமாண்டமான அளவில் இத்தேர்தலில் தோல்வியடையும் என்பது எனது கணிப்பு என்று தெரிவித்தார்.
இதுகுறித்து திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் அதே டிவிக்கு அளித்த பேட்டியில்,
"அதிமுக ஆதரவு பத்திரிகைகளில் வெளியாகும் செய்தியை படித்துவிட்டு அழகிரி அவ்வாறு கூறியுள்ளார். உண்மை நிலவரம் அது அல்ல. திமுக இத்தேர்தலில் பெரும் வெற்றி பெறும். அதிமுக ஆதரவு இல்லாத வேறு பத்திரிகைகள் திமுக பெரிய வெற்றியை பெறும் என்று கூறியுள்ளன. அதையும் அழகிரி படிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications