லோக்சபா தேர்தல்... இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க திமுக முடிவு
சென்னை: லோக்சபா தேர்தலில் இந்த முறை திமுக இளைஞர் அணியைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாம்.
இதன் காரணமாக பல மூத்தவர்களுக்கு டிக்கெட் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், மூத்தவர்கள் பலரின் வாரிசுகளுக்கு நிறைய வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேர்காணல் தற்போது நடந்து வருகிறது. நேர்காணல் முடிந்தவுடன் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது. அதாவது மார்ச் 3ம் தேதிக்கு மேல் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20ம் தேதி முதல் நேர்காணல்
திமுக சார்பில் போட்டியிட விரும்பி விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கடந்த 20ம் தேதி முதல் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நேர்காணல் நடந்து வருகிறது.

இதுவரை 20 தொகுதிகளுக்கு முடிந்தது
இதுவரை 20 தொகுதிகளுக்கு அதாவது நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, கரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், சிதம்பரம், கடலூர், நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் முடிந்துள்ளது.

இன்று ரெஸ்ட்...
இன்று நேர்காணல் கிடையாது. ஓய்வு நாளாகும். நாளை மீண்டும் நேர்காணல் தொடங்கும்.நாளை கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது.

மார்ச் 3ம் தேதி வரை
மார்ச் 3ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும். நேர்காணலுக்கு வருவோரிடம் பல்வேறு வகையான கேள்விகள் கேட்கப்பட்டு பதில் வாங்கப்படுகிறது கூட்டணி யாருடன் சேரலாம் என்பது குறித்தும் முக்கியமாக கேட்கப்படுகிறது.

எல்லாக் கேள்வியும் ஸ்டாலின்தான்
பெரும்பாலும் மு.க.ஸ்டாலின் கேள்விகளைக் கேட்கிறாராம். அவ்வப்போது கருணாநிதி, அன்பழகன் ஆகியோரும் கேட்கிறார்களாம்.

இளைஞர் அணிக்கு நல்ல வாய்ப்பு
அறிவாலயத் தகவல்களின்படி இளைஞர் அணியினருக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

எத்தனை சீட்களில் போட்டியிடும்
கூட்டணிக்கு பெரிய கட்சிகள் வேறு எதுவும் வருமா என்று தெரியவில்லை. ஒரு வேளை தேமுதிக வந்தால் அதற்கேற்ற வகையில் தனது சீட்களை சற்று குறைக்க திமுக முன்வரலாம். அப்படி வராதபட்சத்தில் திமுக அதிகபட்ச இடங்களில் அதாவது 20 இடங்களுக்குக் குறையாமல் அது போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications