கருணாநிதி எப்படி இருக்கிறார்.. காவிரி மருத்துவமனையில் கூடிய அரசியல் தலைவர்கள்!
Recommended Video

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு இருக்கும் காவிரி மருத்துவமனையில் திமுக தலைவர்கள், தொண்டர்கள், கருணாநிதியின் உறவினர்கள் கூடி வருகிறார்கள்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிஅனுமதிக்கப்பட்டு இருக்கும் காவிரி மருத்துவமனையில் திமுக தலைவர்கள், தொண்டர்கள், கருணாநிதியின் உறவினர்கள் கூடி வருகிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது மோசமான நிலையை அடைந்துள்ளது. அவர் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை நேற்று இரவும் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.காவிரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

வந்துவிட்டார்
கருணாநிதி அனுமதி ஆகி இருக்கும் காவேரி மருத்துவமனைக்கு கனிமொழி அதிகாலையிலேயே வந்துவிட்டார். அதிகாலையில் முதல் நபராக கருணாநிதியை பார்க்க அவர் வந்திருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக, ராசாத்தி அம்மாள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். அதேபோல் கலாநிதி மாறனும் காலையிலேயே மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின் நேற்று இரவு முழுக்க காவிரி மருத்துவமனையில் இருந்தார். அதிகாலை 5.30 மணிக்கு அவர், அங்கிருந்து கிளம்பி அதே பகுதியில் இருக்கும் தன்னுடைய ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு சென்று இருக்கிறார். அதன்பின் மீண்டும் அவர், இன்று காலை 9.30 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.

திமுக செயலாளர்கள்
இன்று காலை ஸ்டாலினுடன் துரைமுருகன், அன்பழகன் ஆகியோர் வந்திருக்கிறார்கள். அதேபோல் மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள் பலர் கூடி இருக்கிறார்கள். இன்னும் சில திமுக நிர்வாகிகள் அங்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது.

மற்ற தலைவர்கள் வருகை
திமுக கட்சியினர் இல்லமால், திருமாவளவன், வைகோ, அன்புமணி உள்ளிட்ட தோழமை கட்சியினர், மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரத்தில் அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் சிலர் காவேரி மருத்துவமனைக்கு வருவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் தேசிய கட்சியின் தலைவர்களும் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications