சர்க்கரை விலை உயர்வு... தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டம்
ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டம்
Recommended Video

சென்னை: ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து பல இடங்களில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகள் முன் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.
ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் கடந்த 17ஆம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழை காரணமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்தும், ரேஷன் பொருட்களை முறையாக வழங்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

திமுகவினர் ஆர்பாட்டம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 1,200 ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையிலும், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலும் திருவொற்றியூரில் முன்னாள் அமைச்சர் கே.பி பி சாமி தலைமையிலும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

சர்க்கரை விலை உயர்வு
சேலம் செவ்வாய்பேட்டையில் தொ.மு.ச. பேரவைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருவிடை மருதூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நெல்லை, கடலூர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

நெல்லையில் கைது
நெல்லை மேற்கு மாவட்ட திமுக சார்பில் பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று ரேசன் கடை முன்பு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ஆளும் கட்சிக்கு எதிராக முழக்கம்
தேனி மாவட்டம் போடி, கரூர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் காங்கிரஸ், மற்றும் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர். அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications