குன்னூர் தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி ஆ.ராசாவின் காரை மறித்து செருப்பு வீச்சு
நீலகிரி: குன்னூர் தொகுதி திமுக வேட்பாளர் பா.மு. முபாரக்கை மாற்றக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் காரை மறித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது ராசாவின் கார் மீது செருப்பு வீசப்பட்டுள்ளது.
திமுக தலைமை வேட்பாளர் பட்டியலை அறிவித்த சில நிமிடங்களிலேயே கட்சியினர் பலரும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர். சில தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றக் கோரி போராட்டமும் நடத்தினர். போராட்டத்தை அடுத்து சில தொகுதிகளின் வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர்.

குன்னூர் தொகுதி வேட்பாளராக படுகர் இனத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான கா. ராமச்சந்திரன் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் குன்னூர் தொகுதி வேட்பாளராக மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து முபாரக்கை மாற்றக் கோரி ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். படுகர் இனத்தவர்கள் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே போட்டியிட முடியும். அப்படி இருக்கையில் தலைமை இப்படி செய்துவிட்டதே என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி தொகுதி எம்.பி.யாக இருந்த ஆ.ராசாவின் பரிந்துரையின்பேரில் தான் முபாரக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கோத்தகிரியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் காரை ராமச்சந்திரன் ஆதரவாளர்கள் மறித்து போராட்டம் நடத்தினர். அப்போது கார் மீது அவர்கள் செருப்பை வீசியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
முபாரக்கை மாற்றக் கோரி ராமச்சந்திரன் தலைமையில் சுமார் 1000 பேர் இன்று கோத்தகிரியில் போராட்டம் நடத்தினர். குன்னூரில் திமுகவினர் முபாரக் கோஷ்டி, ராமச்சந்திரன் கோஷ்டி என இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications