ஆற்காடு வீராசாமி தலையிட்டிருந்தால் அழகிரி, ஸ்டாலின் பிரச்சினையைத் தீர்த்து வைத்திருப்பாரோ!?

ஆற்காடு நா. வீராசாமி, திமுகவில் அதன் தலைவர் கருணாநிதியின் அன்புக்கு பாத்தியப்பட்டவர். கருணாநிதியின் மனம் அறிந்தவர், அதற்கேற்ப செயல்படுவர் என்பதால், திமுக இரண்டாம் கட்ட தலைவர்களிடம் அற்காட்டார் மீது மிகுந்த மரியாதை உண்டு.
திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம், மிக முக்கிய இலாகாவில் வீராசாமி அமைச்சராக அமர்வார். திமுக பொருளாளராகவும், தற்போது திமுகவின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். ஆனால் முன்பு போல இவர் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை.
கடந்த திமுக ஆட்சியின் போது, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக பணியாற்றிய போது, தமிழத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. இதன் காரணமாக, திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆற்காடு வீராசாமி மீது கருணாநிக்கு மிகவும் வெறுப்பானது. அதன் பிறகுதான் ஆற்காடு வீராசாமியின் செல்வாக்கு மங்கிப் போனதாக கூறப்படுவதுண்டு.
கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் உடல் நிலை சரியில்லை என்ற காரணம் காட்டி இவர் ஓரம் கட்டப்பட்டார். அன்று முதல் அமைதியாக ஒதுங்கி விட்டார்.
ஆனால் ஆற்காடு வீராசாமி இல்லாமல் போனதால்தான் திமுக தலைமைக்கும், 2ம் கட்ட தலைமைக்கும் இடையே இடைவெளி அதிகரித்து விட்டதாக திமுகவில் சிலர் கூறுகிறார்களாம்.
எப்போதாவது திமுக தலைமைக்கும், 2ம் கட்டத் தலைவர்களுக்கும் இடையே மனக் கசப்பு வந்தால், அது குறித்து இரு தரப்புக்கும் இடையே பாலம் போல செயல்பட்டு பிரச்சினையைத் தீர்க்க ஆற்காடு வீராசாமி பாடுபடுவார். இதுபோல பல பிரச்சினைகளும் முன்பு தீர்ந்துள்ளன என்கிறார்கள்.
ஆற்காடு வீராசாமியின் திறமை திமுக பொதுச் செயலாளர் அன்பழன் , துரைமுருகன் , கோ.சி.மணி , டி.ஆர்.பாலு போன்ற தலைவர்களுக்கு தெரியும். எனவே, கட்சி நலன் கருதி ஆற்காடு வீராசாமி மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் அல்லது அவரைப் போன்ற ஒருவரை திமுக தலைமை அடையாளம் காட்ட வேண்டும் என திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் வலுவான குரல்கள் ஒலித்த வண்ணம் உள்ளது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications