சட்டசபையில் இருக்கை வசதி செய்து கொடுத்தால் கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்பார் - ஸ்டாலின்
சென்னை: சட்டசபையில் இருக்கை வசதி செய்து கொடுக்கப்பட்டால் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொள்வது பற்றி பரிசீலனை செய்யப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக 89 இடங்களில் வென்று வலுவான எதிர்கட்சியாக சட்டசபையில் அமர உள்ளது. இந்த நிலையில் சட்டசபையில் எழுப்பவேண்டிய பிரச்னைகள், விவாதத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை. சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
நாளை சட்டசபை கூட்டம் தொடங்க உள்ளதால் கூட்டத்தில் திமுகவின் பங்கு, செயல்பாடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
கூட்டத்திற்கு பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக சார்பில் 42 புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதிக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கருணாநிதி தமிழக சட்டசபைக்கு வந்து செல்லும் வகையில் உரிய இருக்கை வசதி செய்து தரப்பட்டால், கருணாநிதி சட்டசபைக்கு வருவது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்றார் ஸ்டாலின்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications