அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. பரபரப்பு ஆலோசனை
சட்டசபை இன்று கூடவுள்ள நிலையில் திமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து நேற்று திமுக எம்எல்ஏ -க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
சென்னை: சட்டசபையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 16-ஆம் தேதி நடைபெற்றது. அன்று நிதி அமைச்சர் ஜெயகுமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபையை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவு செய்தனர்.

2017-18-ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகளும் 2016-17-ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதங்கள் நடத்தப்படாமலேயே கூட்டத் தொடரை முடித்து விட்டதால் மீண்டும் சட்டசபையை கூட்ட வேண்டும் என்று திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற அந்த தீர்மான நகலை சபாநாயகர் தனபாலிடம் திமுகவினர் அளித்தனர். இதைத் தொடர்ந்து சட்டசபை கூட்டப்படாமலேயே இருந்தநிலையில், சட்டசபையை கூட்டினால் பெரும்பான்மையை இழந்துவிடுவோம் என்ற அச்சம் எடப்பாடி அரசுக்கு உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் சட்டசபை பேரவைச் செயலாளராக இருந்த ஜமாலுதீன் ஓய்வு பெற்றதை அடுத்து, பூபதி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சட்டசபை மானியக் கோரிக்கைகள் ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே கூவத்தூரில் பணம் குதிரை பேரம் நடைபெற்றதாக தனியார் தொலைகாட்சி வீடியோ வெளியிட்டது. இந்நிலையில் இன்று சட்டசபை கூடுகிறது. அப்போது எம்எல்ஏ-க்களின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications