திருமயம் திமுக எம்.எல்.ஏ.ரகுபதி உள்பட 5 பேர் சாலை விபத்தில் காயம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே வியாழக்கிழமை பிற்பகலில் நேரிட்ட சாலை விபத்தில் திருமயம் தொகுதி திமுக எம்எல்ஏ- எஸ். ரகுபதி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அவருடன் சென்ற 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
திருமயம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ். ரகுபதி தனது தொகுதிக்கு உள்பட்ட புதுப்பட்டி பகுதியில் வியாழக்கிழமை கட்சி நிர்வாகி ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பிற்பகலில் தனது காரில் புதுக்கோட்டைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

ஒத்தப்புளிக்குடியிருப்புப் பகுதியில் கார் சென்ற போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் குறுக்கே வந்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் உள்ள வயலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லேசான காயமடைந்த எம்எல்ஏ- ரகுபதி உள்பட 5 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவிச் சிகிச்சை பெற்றனர். பிறகு ஓய்வுக்காக புதுகை கிழக்கு இரண்டாம் வீதியிலுள்ள தனது வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார் ரகுபதி. இவ்விபத்து குறித்த தகவல் அறிந்த திமுகவினர் அவரது இல்லத்துக்கு திரண்டு சென்று நலம் விசாரித்தனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications