குஷ்பூவுக்கு சீட்டு? பேஸ்ட்ல உப்பு?.. ட்வீட்டரில் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கலகல உரையாடல்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு கேட்ட அக்கட்சி எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் இன்று ட்விட்டரில் 2 மணி நேரம் சராமரியாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்தார்.

திமுகவின் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவான ஜெ. அன்பழகன் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ட்விட்டரிலேயே முகாமிட்டு ஒவ்வொரு கேள்விக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாற்றி மாற்றி பதில் ட்விட்டுகளைப் போட்டுக் கொண்டே இருந்தார்.

#AskAnbazhagan என்ற ‘டேக்' மூலமாக @JAnbazhagan என்ற ட்வீட்டர் ஐடியில் நடைபெற்றது இந்த உரையாடல். இதில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? திமுகவில் புதிய பேச்சாளர்கள் ஏன் உருவாக்கப்படவில்லை? மு.க. அழகிரி விவகாரம், அதிமுகவுக்கு தாவப் போகிறீர்களா? புதிய திரைப்படங்கள், ஜெயலலிதாவிடம் பிடித்த விஷயம், தொலைக்காட்சி விவாதங்கள் என ஏராளமான கேள்விகள் சராமரியாக கேட்கப்பட்டன. இதற்கு 2 மணி நேரம் பொறுமையாக அன்பழகன் பதிலளித்தார்.

அதிமுகவுக்கு தாவப் போகிறீர்களா? என்ற கேள்விக்கு தேர்தல் முடிந்த பின்னர் ஜெயலலிதாதான் திமுகவில் சேருவார் என்று தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார் அன்பழகன். அதேபோல் தேர்தலுக்குப் பின்னர் பாஜகவை நிச்சயம் திமுக ஆதரிக்காது என்றும் அன்பழகன் தெரிவித்திருக்கிறார்.

DMK Mla's live twitter chat today

உரையாடல்களில் சில சுவாரசியங்கள்:

பேஸ்ட்ல உப்பு இருக்கா?

தேவா © ‏@DeventhiraM : சார் நீங்க யூஸ் பண்ணுற பேஸ்ட்ல உப்பு இருக்கா ?

@JAnbazhagan... "@DeventhiraM உப்பு இல்லை பல் கூச்சம் போகிற ஜெல் இருக்கு".

ட்விட்டர் தாத்தா ‏@PeriyaStar : காங்கிரஸ் கை குடுப்பீகன்றதுல டவுட் இல்ல, தொலைதொடர்பு துறை கொடுக்கறேன்னு சொன்னா பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பீகளா?

@JAnbazhagan: @PeriyaStar நிச்சயமாக நாங்கள் மத வாத கட்சிகளுடன் சேருவதற்கு வாய்ப்பில்லை. தாத்தாவுக்கு ஏன் டவுட்

மாயவரத்தான்.... ‏@mayavarathaan கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவி வீழ்ச்சிக்கு எது காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

@JAnbazhagan @mayavarathaan 2G விவகாரத்தில் ஊடங்களிலும், பத்திரிக்கைகளிலும் வந்த தவறான பொய் பிரச்சாரமே காரணம்.

Teddy Daniels ‏@quranzan அய்யா ஜூஸ் கடையை இப்போ யாரு வெச்சிருக்காங்க?

@JAnbazhagan @quranzan கண்டிப்பாக நீங்கள் இல்லை என்னுடைய தம்பி பார்த்துக்கொள்கிறார்.

Teddy Daniels ‏@quranzan கழகத்தின் பிரச்சார பீரங்கி குஷ்பூ அக்காவிற்கு சீட்டு குடுக்காததற்குக் காரணம்?

@quranzan @khushsundar அவர் தேர்தலில் நிற்பதாக மனு எதுவும் திமுக வில் தரவில்லை. பத்திரிக்கைகள் தவறான தகவலை மக்களிடம் பரப்புகிறார்கள்.

மங்கள்யான் ‏@Rocket_Rajesh அழகிருக்கும் ஸ்டாலினுக்கும் இடையில நடக்குறது யுத்தமா, புனிதப்போரா, இல்ல சகோதரப் பாசப்போராட்டமா சார்.

@JAnbazhagan @Rocket_Rajesh எதுவும் கிடையாது. அழகிரி கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய காரணத்தினால் கட்சியை விட்டு வெளியேற்றப் பட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+