சட்டசபையில் அமளி... சாலை மறியல் - ஸ்டாலின் கைது
தலைமை செயலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

சென்னை: சட்டசபையில் இருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும் ரத யாத்திரைக்கு எதிராகவும் சாலையில் மறியல் செய்த ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் வி.எச்.பி. ரத யாத்திரைக்கு எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரத யாத்திரைக்கு மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறிய ஸ்டாலின், சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

ரத யாத்திரை குறித்து டிஜிபி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்திய ஸ்டாலின் இது அதிமுக ஆட்சியா? அல்லது பாஜக ஆட்சியா? என விமர்சித்தார்.
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார். ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல என்றும் 5 மாநிலங்களில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் யாத்திரை வந்துள்ளது. யாத்திரையால் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் விளக்கம் அளித்தார்.
அதை ஏற்க மறுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் அமளி துமளியில் ஈடுபட்டனர். இருக்கையில் அமர கோரி சபாநாயகர் வலியுறுத்தியும் அவர்கள் அமளியில் ஈடுபடவே கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடை செய் தடை செய் என்று சாலையில் அமர்ந்து அனைவரும் முழக்கமிட்டனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு ராயப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும், எம்எல்ஏ தமிமுன் அன்சாரியும் மறியலில் ஈடுபட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications