நடிகர் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவதில் தவறில்லை.. சொல்கிறார் ‘அத்தை‘ கனிமொழி

நடிகர் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என திமுக எம்பியும் அவரது அத்தையுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: நடிகர் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என திமுக எம்பியும் அவரது அத்தையுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அண்மைக்காலமாக கட்சி சார்ந்த விழாக்களில் முன்னிலைப் படுத்தப்பட்டு வருகிறார்.

அண்மையில் நடைபெற்ற முரசொலி பவள விழா மற்றும் திமுகவினரின் போராட்டம் உள்ளிட்டவற்றிலும் ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப் படுத்தப்பட்டார். திரைப்படங்களில் நடித்து வரும் உதயநிதி தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அண்மையில் தெரிவித்தார்.

பிறந்ததில் இருந்தே

பிறந்ததில் இருந்தே

கட்சி சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிட தயார் என்றும் அவர் கூறினார். மேலும் பிறந்ததில் இருந்தே தான் அரசியலில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கனிமொழியிடம் கேள்வி

கனிமொழியிடம் கேள்வி

இந்நிலையில் திமுக எம்பியும் உதயநிதி ஸ்டாலினின் அத்தையுமான கனிமொழி புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

உதயநிதிக்கு வாழ்த்து

உதயநிதிக்கு வாழ்த்து

அதற்கு பதில் அளித்த கனிமொழி உதயநிதி அரசியலுக்கு வருவதில் தவறில்லை என்றார். மேலும் கட்சியில் பணியாற்ற உதயநிதிக்கு வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறினார்.

கட்சியில் சலசலப்பு

கட்சியில் சலசலப்பு

உதயநிதி சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தீவிர அரசியலில் உள்ளார் என்றும் கனிமொழி கூறினார். திமுகவில் வாரிசு அரசியல் நடப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகை குறித்த பேச்சு கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+