இதுதான் அரசியல் நாகரீகம்!.. மேடையில் கடம்பூர் ராஜுவுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி.. நெகிழ்ந்த மக்கள்
கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நன்றி தெரிவித்தார்.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு 2019- 2020ஆம் ஆண்டு கல்வியாண்டில் பயின்ற இளநிலை மாணவ மாணவியர்கள் 412 பேருக்கு முதுநிலை மாணவ மாணவியர்கள் 110 பேருக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி பட்டங்களை வழங்கினார்.
தொடர்ந்து கனிமொழி எம்பி பேசுகையில் மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும், அவ்வாறு சாதித்த பின்னர் நாம் தான் என்ற மன நிலைக்கு மாணவர்கள் போய்விடக் கூடாது.

உயர் கல்வி
கிராமங்களில் இருப்பவர்களுக்கும் உயர்கல்வி என்பது கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் அரசு கலைக் கல்லூரிகள். நம்முடைய மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கல்வி கற்க
மாணவர்கள் கல்வி கற்க வர வேண்டும் என்பதற்காக கல்லூரிகளை உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு சிலர் கல்லூரிக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காக தடைபோடுவதற்காகவே நுழைவு தேர்வு என்ற தடைகற்களை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். உங்கள் (மாணவர்) கையில் தான் அடுத்த கட்ட போராட்டம் இருக்கிறது.

நம்முடைய கடமை
அது நம்முடைய கடமை. நமக்கு கிடைத்து விட்டது, அடுத்த தலைமுறை, எதிர்கால தலைமுறையினருக்கும் கிடைக்க வேண்டும். நம் முன்னோர்கள் நமக்கு இந்த பாதையை உருவாக்கி தந்து இருப்பது போல இந்த கல்வி அடுத்த தலைமுறைக்கும் கிடைக்க போராட வேண்டும். அதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

கோவில்பட்டி
கோவில்பட்டியில் அரசு கலைக் கல்லூரி கொண்டு வர முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு நிறைய பாடுபட்டு இருக்கிறார். இந்த மேடையில் கட்சி மாச்சரியங்களை தாண்டி எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பு
இதைத் தொடர்ந்து கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தான் அந்த ஆட்சி, புதியதாக ஆட்சி அமைக்க வேண்டிய அவசியமில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications