கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை.. ரூ 1 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு கனிமொழி நோட்டீஸ்
சென்னை: கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் புகாருக்கு திமுக எம்பி கனிமொழி விளக்கமளித்துள்ளார். அவதூறு வீடியோவை பரப்பியதற்கு ரூ 1 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிடுவதாக கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வீடியோவாக வெளியிட்டிருந்தார். அதில் முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், செந்தாமரை, டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, கனிமொழி உள்ளிட்டோரின் பெயர்களையும் அவருக்கு இருக்கும் சொத்து மதிப்பையும் வெளியிட்டிருந்தார்.
ஆனால் இந்த சொத்து மதிப்புக்கு எந்த வித ஆதாரத்தையும் அண்ணாமலை வெளியிடவில்லை. இது குறித்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அன்றைய தினமே பிரஸ்மீட் வைத்து அண்ணாமலை 15 நாட்களுக்கு ஆதாரங்களை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார்.

ஆர்.எஸ்.பாரதி வக்கீல் நோட்டீஸ்: இதையடுத்து அண்ணாமலை மன்னிப்பு கேட்காத நிலையில் ஆர்.எஸ். பாரதி வக்கீல் நோட்டீஸை அனுப்பியிருந்தார். அதில் திமுகவினர் மீது அடிப்படை ஆதாரமில்லாமல் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை ரூ 500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டிருந்தார். இதற்கு 4 பக்க அறிக்கையில் பதிலளித்த அண்ணாமலை, தனது வீடியோவையும் டிவியில் பேட்டியையும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பார்த்ததற்கு நன்றி.
ரூ 500 கோடியே ஒரு ரூபாய்: ஆரூத்ரா மோசடியில் ஆதாரமே இல்லாமல் என்னை சம்பந்தப்படுத்தி அவதூறு பரப்பிய விவகாரத்தில் திமுக எனக்கு ரூ 500 கோடியே ஒரு ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் கோடிக்கணக்கில் திமுகவிடம் சொத்து இருக்கும் போது என்னிடம் ஆர்.எஸ்.பாரதி 500 கோடி ரூபாய் கேட்கிறாரே என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்திருந்தார். இந்த நிலையில் கலைஞர் டிவியில் திமுக எம்பி கனிமொழிக்கு ரூ 800 கோடி சொத்து இருப்பதாக அண்ணாமலை கூறிய புகாரை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து கனிமொழி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கனிமொழி நோட்டீஸ்: கனிமொழி சார்பாக வழக்கறிஞர் மனுராஜ் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிய நோட்டீசில், "தமிழக பாஜக தலைவராகிய நீங்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி உங்கள் கட்சித் தலைமையகத்தில் டிஎம்கே ஃபைல்ஸ் என்ற பெயரிலான ஓர் அவதூறு காணொலியை பத்திரிகையாளர்கள் முன்பு திரையிட்டிருக்கிறீர்கள். அந்த அவதூறு காணொலியில் எனது கட்சிக்காரர் திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி கருணாநிதி பெயரைக் குறிப்பிட்டு 'அபிடவிட் படியான சொத்து மதிப்பு 30.33 கோடி ரூபாய் மற்றும் கலைஞர் டிவி 800 கோடி ரூபாய் மொத்த மதிப்பு 830.33 கோடி' என புகைப்படத்துடன் காட்டப்பட்டுள்ளது.
கலைஞர் டிவியில் பங்கு இல்லை: இது அவரை களங்கப்படுத்தும் வகையிலான அவதூறு மட்டுமல்ல.. அடிப்படை ஆதாரமற்றது, கற்பனையானது மற்றும் ஆவணங்களில் பதிவுகளில் இருப்பவற்றிற்கு முரண்பாடானது. கடந்த 10-2-2023 முதல் என் கட்சிக்காரர் கலைஞர் டிவியில் எந்த பங்கும் பெற்றிருக்காத நிலையில் எவ்வித அடிப்படைத் தகவல்களையும் சரிபார்க்காமல் என் கட்சிக்காரரின் நற்பெயரைக் குலைப்பதை உள் நோக்கமாக கொண்டு இந்த அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் நாடு முழுதும் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பிவிடும் வகையிலும் திமுகவின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்தோடும் இந்த அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அவதூறு வீடியோவுக்காக உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது.

மன உளைச்சலில் கனிமொழி: இந்த அவதூறு வீடியோவை பார்த்து என் கட்சிக்காரரின் நண்பர்கள், நலம் விரும்பிகள் அவரைத் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்திருக்கிறார்கள். மேலும் என் கட்சிக்காரரின் தொகுதியிலிருந்து மக்களும், கட்சியினரும் இது தொடர்பாக விசாரித்திருக்கிறார்கள். இதன் மூலம் என் கட்சிக்காரர் மீது தனிப்பட்ட முறையிலும், பொதுவாழ்விலும் வைத்திருந்த மதிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட அவதூறு பரப்பும் வீடியோவை வெளியிட்டதன் மூலம் இந்திய தண்டனைச் சட்டம் 499, 500 பிரிவுகளின் படி தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்தவர் ஆகிறீர்கள். உங்களது அவதூறு பிரச்சாரத்தின் மூலம் எனது கட்சிக்காரர் அளவிட முடியாத மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவதூறு பரப்பும் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை என் கட்சிக்காரருக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
48 மணி நேரம் கெடு: மேற்கண்ட அவதூறு வீடியோவை இந்த நோட்டீஸ் கண்ட 48 மணி நேரத்தில் திரும்பப் பெற்றுக் கொண்டு அனைத்து சமூக தளங்களிலும் அதை அகற்றி, எனது கட்சிக்காரரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். தவறும் பட்சத்தில் உங்கள் மீது எனது கட்சிக்காரர் சார்பாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான எல்லா விளைவுகளுக்கும் தாங்களே பொறுப்பு" என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம்












Click it and Unblock the Notifications