வீடு முன் அழுத பெண்.. நடிகர் விஜய் மீது திமுக எம்பி நம்பிக்கை! ரசிகர்கள் இப்படி செய்றது இயல்புதானாம்
சென்னை: நடிகர் விஜயை காண அவரது வீட்டின் முன் இளம்பெண் ஒருவர் கை எடுத்து கும்பிட்டு அழுத காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் நிலையில், ட்விட்டரில் அதை பகிர்ந்து உள்ள தருமபுரி தொகுதி திமுக எம்பி செந்தில்குமார், தனது ரசிகையின் ஆசையை நடிகர் விஜய் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
தமிழ் மட்டுமின்றி இந்திய அளவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீரில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் நடிகர்களிலேயே அதிகளவு ரசிகர்களை வைத்திருக்கும் விஜய்யை காண வேண்டும் என்பது பலரது ஆசை. இதற்காகவே அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டு அவரை சந்திக்க முயல்வது வாடிக்கை. காஷ்மீரில் இருந்து வந்த பிறகு சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்பதே விஜயின் விருப்பமாக இருந்ததாம்.
ஆனால், எங்கு சென்றாலும் ரசிகர்கள் கூட்டம் வந்துவிடுவதால் படப்பிடிப்பில் இடையூறுகள் ஏற்படும் என்று கூறி ஐதராபாத்துக்கு படப்பிடிப்பை மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கும் விஜய்க்காக சமூக வலைதளங்களில் எப்போதும் ஏதாவது ஒரு ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் விஜயை பார்க்க வேண்டும் என சிறுமி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டான நிலையில், அவரிடம் வீடியோ கால் செய்து நடிகர் விஜய் பேசினார். விஜய்யின் இந்த செயல் மக்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. சென்னை நீலாங்கரையில் அமைந்து இருக்கும் நடிகர் விஜய்யை காண அவரது வீடு முன் ரசிகர்கள் திரள்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான் காஞ்சிபுரத்தை சேர்ந்த இளம் பெண் ரசிகை ஒருவர் நடிகர் விஜய் வீட்டின் முன் நின்றுகொண்டு, கண்காணிப்பு கேமராவை நோக்கி உங்களை பார்க்க வேண்டும் அண்ணா என்று சொல்லி அழும் காட்சி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. பானிபூரி வியாபாரம் செய்து வரும் சங்கர் என்பவரது மகள், விஜயின் நீலாங்கரை வீட்டின் கதவை அணைத்தும், விஜய் வீட்டு வாசலை தொட்டும் வணங்குகிறார். நீங்கள் அழைப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கொள்கிறேன்." என்றார்.

இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பெண்ணின் தந்தை, விஜய் தன் மகளை அழைத்து புகைப்படம் எடுத்துக்கொள்வார் என்று தாங்கள் நம்புவதாக தெரிவித்து உள்ளனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில் தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரும் இதை பகிர்ந்து உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருக்கும் அவர், "நடிகர் விஜய் அவர்கள் இந்த பாசமிகு காஞ்சிபுரம் சார்ந்த ரசிகையின் ஆசையை நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளது. ரசிகர்கள் திரைப்படங்களின் நடிகர்களை ஓர் முறையாவது சந்தித்து புகை படம் எடுக்க வேண்டும் என ஆசை படுவது இயல்பு தான்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
விஜய்க்கு அடுத்த அக்னி பரீட்சை.. அமைச்சர்களுக்கு முக்கிய அசைன்மென்ட்! இடைத் தேர்தலுக்கு ரெடியான தவெக -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்! -
கோவில்ல பிஸினஸ் நடக்குது.. விஜய் போட்ட பெரிய ஆர்டர்! யாரும் தப்ப முடியாது! இசஅ அமைச்சர் ரமேஷ் உறுதி! -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்!












Click it and Unblock the Notifications