"முரட்டு பக்தர்" பெரியசாமியின் உடலுக்கு "எம்பார்மிங்" - ஞாயிறன்று இறுதிச்சடங்கு
உடல்நலக்குறைவினால் மரணமடைந்த தூத்துக்குடி திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமியின் உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு சொந்த ஊர் கொண்டு செல்லப்படுகிறது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியால் முரட்டு பக்தன் எனவும் அழைக்கப்பட்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி இன்று உடல்நலக்குறைவினால் மரணமடைந்தார். பெரியசாமியின் உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு சொந்த ஊர் கொண்டு செல்லப்படுகிறது. ஞாயிறன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
78 வயதான பெரியசாமி உடல்நலக்குறைவினால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனின்றி இன்று காலையில் அவர் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பார்மிங் செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடத்தைச்சேர்ந்த பெரியசாமி 30 ஆண்டுகளாக திமுக மாவட்ட செயலாளராக இருந்தவர். நெருக்கடி நிலையின் போது மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் ஆவார்.
1986 ஆம் ஆண்டு நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 1989, 1996 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ வாகவும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். என்.பெரியசாமியின் மகள் கீதா ஜீவன் தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே, உடல்நலம் குன்றியிருந்தார் பெரியசாமி. அவருக்கு நுரையீரல் பாதிப்பு உட்பட பல்வேறு பாதிப்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார்.
இந்த நிலையில், இன்று காலை அவர் மரணமடைந்தார். அவரது உடல், தூத்துக்குடிக்கு கொண்டுசெல்லப்பட உள்ளது. இதற்காக பெரியாசாமியின் உடல் ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பார்மிங் செய்யப்படுகிறது.
அவரது இறுதிச்சடங்கில், திமுகவின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள், வைரவிழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் பெரியசாமியின் மரணம் திமுகவிற்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications