திமுகவுக்கு அந்திமகாலம் நெருங்கி விட்டது... தேமுதிகவை உடைக்க சதி.. மதிமுக பாய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிகவை உடைக்க திமுக செய்யும் சதிதான் இது என்று மதிமுக நிர்வாகி மல்லை சத்யா கூறியுள்ளார். அந்திமகாலத்தில் இருக்கும் திமுக ஆள் பிடிக்கும் வேலையை செய்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து தேமுதிக தேர்தலை சந்திக்கிறது. இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தங்களின் கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்த்த திமுக ஏமாந்து போனதென்னவோ உண்மைதான்.

DMK Nets DMDK's MLAs and Secretaries says Mallai Sathya

மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிகவில் இணைந்ததால் அதிருப்தியடைந்த பல நிர்வாகிகள் வரிசையாக திமுகவில் இணைந்து வருகின்றனர். இது கூட்டணிக்கு வராத தேமுதிகவை படிப்படியாக கரைக்கும் முயற்சி என்று திமுக மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் விஜயகாந்தின் குரலாக இருந்த கொள்கைப் பரப்புச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் தலைமையில் எஸ். ஆர் பார்த்திபன் உட்பட ஐந்து எம்.எல்.ஏக்கள் 10 மாவட்டச் செயலாளர்கள் இன்று பகிரங்கமாக , மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகி, திமுக கூட்டணியில் இணைவது குறித்து நாளை பிற்பகலுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என சந்திரகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கெடு விதித்துள்ளனர்.

இதற்கு தேமுதிகவில் உள்ள பல எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது சுயநலமான முடிவு என்று கூறும் தேமுதிக எம்.எல்.ஏ மோகன்ராஜ், மாவட்ட செயலாளர்களை நம்பி தேமுதிக இல்லை என்று கூறுவதோடு திமுக கொடுத்த பணத்திற்கு மயங்கி விட்டனர் என்று கூறியுள்ளார். விஜயகாந்தையும், தேமுதிக தொண்டர்களையும் நம்பித்தான் கட்சி உள்ளது. சில நிர்வாகிகள் செல்வதால் கட்சிக்கு எந்த சேதமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே சந்திரகுமார் விதித்துள்ள கெடு பற்றி கருத்து கூறியுள்ள மதிமுக நிர்வாகி மல்லை சத்யா, தேமுதிகவை உடைக்க திமுக செய்யும் சதிதான் இது என்றார். சில தினங்களுக்கு முன்பு பேசிய ஸ்டாலின், தேமுதிக தானாக கரையும் என்று பேசினார். அதிலிருந்தே தேமுதிக நிர்வாகிகளை வளைக்க இவர்கள் போட்டிருக்கும் திட்டம் வெளியாகிறது.

தங்கள் கட்சியில் வேலை செய்ய ஆள் இல்லை என்று அடுத்த கட்சியில் இருந்து ஆள் பிடித்து வந்து கட்சி நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது திமுக என்றும் மல்லை சத்யா குற்றம் சாட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+