குஷ்பு மீது திமுக முட்டை வீசவில்லை.. அது பொய் செய்தி.. டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்
குஷ்பு மீது திமுக கட்சியினர் முட்டை வீசியதாக திருநாவுக்கரசர் கூறினார் என்ற வந்த செய்தி முழுக்க முழுக்க பொய் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
சென்னை: குஷ்பு மீது திமுக கட்சியினர் முட்டை வீசியதாக திருநாவுக்கரசர் கூறினார் என்ற வந்த செய்தி முழுக்க முழுக்க பொய் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் டிகே எஸ் இளங்கோவன் எம்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நேற்று காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் மறைமலைநகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலத்தலைவர் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சி குறித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியில் தற்போது தேசிய செய்தி தொடர்பாளராக இருக்கும் குஷ்பு குறித்தும், அவர் முன்பு திமுகவில் இருந்தது குறித்தும் பேசியுள்ளார்.

அதில் அவர் குஷ்புவை கண்டித்து அதிகம் பேசி இருந்தார். குஷ்பு, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பேசுவதால், அவருக்கு எதிராக திருநா கோபமாக நிறைய கருத்துக்களை வீசி இருந்தார். இது காங்கிரஸ் கட்சி இடையில் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் இன்று வந்த நாளிதழ் ஒன்றில், ''குஷ்பு திமுகவில் மரியாதையாக நடத்தப்படவில்லை, அவர் திமுகவில் இருந்த போது சில பிரச்சனைகள் வந்தது, இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், அவர் மீது முட்டை வீசி, செருப்பால் அடித்து கட்சியில் இருந்து நீக்கினார்கள் என்று திருநாவுக்கரசர் பேசியதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. இது காங்கிரஸ், திமுக, குஷ்பு உள்ளிட்ட எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் அந்த நாளிதழ் வெளியிட்ட செய்தி பொய் என்று டிகே எஸ் இளங்கோவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ''திமுகவில் இருந்த காலத்தில் குஷ்பு மிகவும் மரியாதையாக நடத்தப்பட்டார், திமுகவில் யாருமே, குஷ்புவிடம் தரக்குறைவாக நடந்து கொண்டது இல்லை. அந்த செய்தியில் சிறிதும் உண்மையில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
திமுக கட்சியில் இருந்து வெளியேறிய பின்பும் கட்சி உறுப்பினர்களுடன் குஷ்பு இணக்கமான போக்கை கடைபிடித்து வருகிறார் என்பது குறிப்பித்தக்கது.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்











Click it and Unblock the Notifications