SMS மூலம் திமுக செய்திகளை அறியும் சேவை துவக்கம்
சென்னை: SMS மூலம் திமுகவின் செய்திகளை அறிந்து கொள்வதற்கான சேவையை அக்கட்சித் தலைவர் கருணாநிதி துவக்கி வைத்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று காலை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், கருணாநிதியின் கடிதங்கள் - அறிக்கைகள் - பேட்டிகள் மற்றும் தி.மு.கழகச் செய்தி வெளியீடுகள், நிகழ்வுகள் அனைத்தும் குறுஞ்செய்தி மூலம் காணும் சேவையினை கருணாநிதி துவக்கி வைத்தார்.

இக்குறுஞ்செய்தி வசதியினை கருணாநிதியின் இணையதள நிர்வாகிகள் என். நவீன் - எஸ். சுரேஷ் ஆகியோரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது.
இக்குறுஞ்செய்தி வசதியினை பயன்படுத்த வேண்டுவோர்,
"DMK (space) (District Name) என டைப் செய்து,
"56070"
என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் கருணாநிதி கடிதம், அறிக்கை, பேட்டிகள் மற்றும் தலைமைக் கழகச் செய்தி வெளியீடுகள் அனைத்தும் வருகிற 15-2-2014 முதல் அனுப்பப்படும்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் அனைத்து வசதிகளையும் தன்னகத்தே கொண்ட கருணாநிதியின் முகநூல் மற்றும் டிவிட்டர் மூலம் பயன்படுத்துவோர் மற்றும் புதிதாக செய்திகள் அறிய விரும்புவோர் இத்தொழில்நுட்ப வசதியினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்நிகழ்வின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., தயாநிதி மாறன், எம்.பி., தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், மாணவர் அணிச் செயலாளர் இள.புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு திமுக தலைமை கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications