வரலாற்றிலேயே முதல்முறையாக... திமுகவிடம் 4 தொகுதிகளை குறைத்து கொடுக்க சொன்ன விஜயகாந்த்
சென்னை: தேர்தல் களத்தில் கூடுதல் தொகுதிகளுக்காக கூட்டணிகளே முறிந்த நிகழ்வுகளை 'சரித்திரம்' பார்த்திருக்கிறது... ஏன் தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்த நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கிறது... ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக, திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 63 தொகுதிகள் வேண்டாம், 'ராசி' அடிப்படையில் 4-ஐ குறைத்து 59 தொகுதிகள் கொடுத்தால் போதும் என சொல்லியிருக்கிறாராம் விஜயகாந்த்.
திமுக கூட்டணிக்கு தேமுதிக வருமா? வராதா? என்ற மிக நீண்ட இழுபறிக்கு கடந்த சில நாட்களாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 59 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டதாகவும் அதை விஜயகாந்த் தரப்பு ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுக 150; காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுக- தேமுதிக கூட்டணியை உறுதி செய்ததில் சன் குழும அதிபர் கலாநிதி முக்கியப் பங்கு வகித்ததாகவும் அவர்தான் இக்கூட்டணியை உறுதி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் கலாநிதி மாறன் -விஜயகாந்த் சந்திப்பின் போது கடந்த 2011 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது போல 63 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றுதான் விஜயகாந்த் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் கலாநிதி மாறன், சரி 63 தொகுதிகளை நான் உறுதியாகப் பெற்று தருகிறேன் என கூற விஜயகாந்த்தும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இது திமுக தலைவர் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட, அவர் அதிர்ச்சி அடைந்து எப்படி இத்தனை தொகுதிகளை ஒதுக்க முடியும் எனக் கேட்டிருக்கிறார். ஆனால் கலாநிதியோ, கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டுமெனில் இத்தனை தொகுதிகளைக் கொடுத்தாக வேண்டும் என கறாராக சொல்ல, ஸ்டாலினும் ஆமோதிக்க வேறுவழியின்றி அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் எதிர்பாராத திருப்பமாக மறுநாள் திமுக தரப்பை விஜயகாந்த்தின் தூதர் ஒருவர் சந்தித்திருக்கிறார்.
அந்த சந்திப்பில், ஜோதிடர் ஆலோசனைப் படி விஜயகாந்த்துக்கு 63 தொகுதிகள் என்பது ராசியில்லையாம்; ஆகையால் 4 தொகுதிகளைக் குறைத்து 59 தொகுதிகளை தேமுதிக வைத்துக் கொள்கிறதாம்; அதில் தான் ராசி எண் 5 வருகிறது என சொல்ல இன்ப அதிர்ச்சியாம் திமுகவுக்கு..
இப்படியும் நம்பிக்கைகள்!
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications